முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கராபுர மறு வாக்குப்பதிவு - அ.தி.மு.க. - தி.மு.க.வினரிடையே தகராறு

சனிக்கிழமை, 16 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

போடி,ஏப்.17 - போடி சட்டமன்ற தொகுதிக்கு நேற்று மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆளும் கட்சிக்கு சாதகமாக நடந்து கொண்டதை அடுத்து அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினரிடையே தகராறு எழுந்தது. 

கடந்த 13 ம் தேதி போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களான ராசிங்காபுரம்,சங்கராபுரம் உப்புக்கோட்டை ஆகிய ஊர்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமாக வாக்குப் பதிவு துவங்கியது. ஆனால் வாக்குப்பதிவு அலுவலர்களால் கணக்கிட்ட ஓட்டுக்களின் எண்ணிக்கை 28 ஓட்டுகள் குறைவாக இருந்தது. இதனால் ஓட்டுப்பதிவை சரியாக கணக்கிட முடியவில்லை.இது குறித்து தேர்தல் பிரிவு அலுவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அதிகாரிகளின் ஆய்வுக்கு பின்னர் சங்கராபுரத்தில் (16.4.2011 அன்று) மறுஓட்டுப்பதிவு நடத்த நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து இக்கிராமம் முழுவதும் முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதன்படி நேற்று சங்கராபுரத்தில் வாக்குப் பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. 

869 வாக்காளர்களை கொண்ட இந்த தொகுதி மறு வாக்குப் பதிவின் முடிவில் ஆண் வாக்காளர்களில் 336 பேரது வாக்குகளும்,  பெண் வாக்காளர்களில் 366 பேரது வாக்குகளும் என மொத்தம் 702 வாக்குகள் பதிவாகி இருந்தன.  வாக்கு சதவீதம் 80.78  என கணக்கிடப்பட்டது. இதனிடையே தி.மு.க. எம்.எல்.ஏ லட்சுமணன் தனது காரில் வாக்கு சாவடிக்கு வந்த போது அவரை வாக்கு சாவடி வரை போலீசார் அனுமதித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தி.மு.க. தரப்பை சேர்ந்த ஏஜண்டும் ஒரு காரில் வாக்குச் சாவடி அருகே காரை நிறுத்தி விட்டு சாவடிக்குள் சென்றதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து வந்த அ.தி.மு.க பொருளாளர் ஓ. பன்னீர் செல்வத்தின் காரை போலீசார் வாக்குச் சாவடியின் எல்லையிலேயே தடுத்து நிறுத்தினர். இது குறித்து அ.தி.மு.க.வினர் போலீசாரிடம் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் இது குறித்து அ.தி.மு.க.வினர் முறையிட்டதன் பேரில் தி.மு.க. எம்.எல்.ஏ லட்சுமணன் மீது போடி புறநகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக ஏ.எஸ்.பி. தலைமையில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்