முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கபாலுவை எதிராக ஈரோட்டில் இளைஞர் காங்கிரசார் போராட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

ஈரோடு,ஏப்.17 - தங்கபாலுவிடம் இருந்து கட்சியை காப்பாற்றக் கோரி ஈரோட்டில் இளைஞர் காங்கிரசார் காந்தி படத்துக்கு முன் நூதன போராட்டம் நடத்தினர். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, கட்சியின் நிர்வாகிகளான கராத்தே தியாகராஜன், எஸ்.வி. சேகர், ஈரோடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் உட்பட 19 பேரை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார். இது காங்கிரசாரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சென்னை உட்பட பல இடங்களில் தங்கபாலுவின் உருவ பொம்மை எரிப்புபோன்ற போராட்டங்கள் நடைபெற்றது. 

இந்த நிலையில் நேற்று ஈரோடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் தலைமையில் திரண்ட காங்கிரஸ் நிர்வாகிகள் காந்தி படத்துக்கு முன் மெழுகு வர்த்தி ஏந்தி நூதன போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தேசப்பிதாவே, தங்கபாலுவிடம் இருந்து கட்சியை காப்பாற்று என கோஷமிட்டனர். இதை தொடர்ந்து சுரேஷ் நிருபர்களிடம் கூறுகையில், 

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஈரோட்டில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றிக்காக கடுமையாக பாடுபட்டோம். 20 நாட்கள் ராகுல் ரதம் மூலம் பிரச்சாரம் செய்தோம். காங்கிரஸ் வேட்பாளர்கள் விடியல் சேகர், பழனிச்சாமி, யுவராஜா எங்கள் மீது புகார் அளித்திருப்பதாக தங்கபாலு நிரூபித்தால் நாங்கள் கட்சியை விட்டே வெளியேறுகிறோம். அப்படி புகார் அளிக்கவில்லை என்றால் தங்கபாலு கட்சியை விட்டு விலக தயாரா என சவால் விடுகிறேன் என்றார். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்