முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கபாலுவுக்கு எதிர்ப்பு பற்றி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி

சனிக்கிழமை, 16 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

 

கரூர். ஏப்.17 - தங்கபாலுவை கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் தொண்டர்களிடம் உள்ளது என்று கரூரில் செய்தியாளர்களிடம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். கரூர் இளைஞல் காங்கிரசின் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் விஜய் ஆண்டனியின் புதிய ஷோரூம் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.செய்தியாளர்களை சந்தித்து காங்கிரஸ் கட்சியிலிருந்து 19 பேரை தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு nullnullநீக்கியது குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-

கட்சியிலிருந்து தங்கபாலு 19 பேரை நீக்கியது செல்லாது என்றும், இளைஞர் காங்கிரசை சேர்ந்தவர்கள் மற்றும் அகில இந்திய தலைவர்களாக உள்ள இவர்களை எல்லாம் நீக்கவேண்டும் என்றாலும், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றாலும்,  அகில இந்திய காங்கிரஸ் அனுமதியோடுதான் செய்யவேண்டும். தான்தோன்றிதனமாக செய்த  தங்கபாலுவின் நடவடிக்கை செல்லாது. இளைஞர் காங்கிரஸை சேர்ந்த பொறுப்பாளர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றால் இளைஞர் காங்கிரஸ் மேலிடமும், இளைஞர்களின் எதிர்காலமாக இருக்க கூடிய ராகுல்காந்தி செய்யவேண்டிய நடவடிக்கையே தவிர, தங்கபாலுவை போன்ற எடுபிடிகள் அல்ல என்றார். 

மேலும் அவர் கூறும்போது, கட்சியின் தொண்டர்களையும், கட்சியிலுள்ள தோழர்களையும் தலைவர்கள் ஏமாற்றியதாக வரலாறு உள்ளது. ஆனால் இன்றைக்கு தமிழகத்தில் கட்டிய மனைவியையே ஏமாற்றிய ஒரு தலைவரை நாம் பார்க்கிறோம். இது காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய இழுக்கு என்றார். மேலும் இதை மேலிடத்தில் தெரிவித்து இருக்கிறோம். சென்னை மயிலாப்nullர் வேட்பாளர் தங்கபாலு மீது நடவடிக்கை எடுத்து கட்சியை விட்டு நீக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடம் உள்ளது என்றார்.

பேட்டியின்போது கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்