விற்பனை வரி குறைப்பு - மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      வர்த்தகம்
Tax

 

புதுடெல்லி,பிப்.11 - மத்திய விற்பனை வரியை மத்திய அரசு குறைத்ததால் மாநிலங்களுக்கு வருவாய்இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரிக்கட்ட மாநில அரசுக்கு ரூ. 7 ஆயிரத்து 29 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய கேபினட் அமைச்சரவை கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. அப்போது மத்திய விற்பனை வரி குறைப்பால் பல மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் அந்த மாநிலங்களுக்கு ரூ. 7 ஆயிரத்து 29 கோடி நிதியுதவி அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் ரூ.3 ஆயிரம் கோடி நடப்பு நதியாண்டில் அளிக்கப்படும் மீதி ரூபாய் அடுத்த நிதியாண்டில் அளிக்கப்படும் என்று கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார். இந்தாண்டு வழங்கப்படும் ரூ. 3 ஆயிரம் கோடி ஏற்கனவே பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டுவிட்டது என்றும் சோனி மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: