அரசியல் வாதிகளுக்கு தலைமை நீதிபதி வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011      அரசியல்
S H -Kapadia

புது டெல்லி,ஏப்.18 - ஊழல் நீதிபதிகளுக்கு அரசியல்வாதிகள் பாதுகாப்பு அளிக்கக் கூடாது என இந்திய தலைமை நீதிபதி கபாடியா கேட்டுக் கொண்டார். டெல்லி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கபாடியா, நீதித்துறை நேர்மை மற்றும் சுதந்திரத்தை நிலைநாட்ட கரை படியாத மனிதர்கள் தேவை. அதற்கான நேரம் வந்து விட்டது. நீதிபதிகளுக்கு சுய கட்டுப்பாடு தேவை. வக்கீல்கள், அரசியல்கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் உடனான தொடர்பை நீதிபதிகள் தவிர்த்திட வேண்டும். ஊழல் நீதிபதிகளுக்கு அரசியல்வாதிகள் பாதுகாப்பு தரக் கூடாது. நீதிபதிகள் எந்த ஆதாயத்திற்காகவும் யாருடைய ஆதரவையும் பெறக் கூடாது. இது ஊழலுக்கு வழிவகுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: