முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரம் இலங்கைக்கு எதிராக தங்கபாலு காமெடி போராட்டம்

செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப்.- 19 - இலங்கை தமிழர்களை கொல்வதை இனியும் சகித்து கொள்ளமாட்டாராம். தொடர்ந்து போராடி இலங்கை அரசை பணியவைப்போம் என்று இலங்கை தூதரகத்துக்கு எதிராக தங்கபாலு போராட்டம் நடத்தி காமெடி பண்ணினார். அவர் போராட்டம் நடத்தும் போதே அருகிலேயே தங்கபாலுவின் உருவபொம்மையை எரித்தது எதிர்கோஷ்டியினர். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை கண்டித்து இலங்கை தூதரகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அறிவித்திருந்தார். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. தடையை மீறி மயிலாப்nullர் நாகேஸ்வரராவ் nullங்கா அருகே தங்கபாலு தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து தங்கபாலு பேசிய தாவது:​ இலங்கை கடற்படை யினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இலங்கை அரசு மத்திய அரசிடம் வழங்கியுள்ள உத்தரவாதத்தை கடைபிடிக்காதது கண்டிக்கத்தக்கது. இதுவரை 450​க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. தொடர்ந்து போராடி இலங்கை அரசை பணியவைப்போம். இந்த போராட்டம் ஒரு தொடக்கம்தான். தொடர்ந்து தாக்குதல் nullடித்தால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும். மத்திய அரசுக்கு என்னுடைய வேண்டுகோள். பொறுத்தது போதும் உடனடியாக மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களை காக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தாமோதரன், சுந்தர வடிவேல், மக்nullல்ஜான், சதாசிவலிங்கம், டாக்டர் நடேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் தடையை மீறி இலங்கை தூதரகத்துக்கு பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். தங்கபாலு உள்பட சுமார் 200 காங்கிரசார் கைது செய்யப்பட்டனர்.
இதற்கடையே தங்கபாலு தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி காங்கிரஸ்சார் தங்கபாலு போராட்டம் நடத்திய நாகேஸ்வரராவ் பூங்கா அருகிலேயே தங்கபாலுவின் உருவபொம்மையை எரித்தனர். ஒருபுறம் தங்கபாலு காமெடி போராட்டம் நடத்த, மறுபுறம் அவரது கட்சியினர் சீரியஸாக தங்கபாலுவின் உருவபொம்மையை எரித்ததை பொதுமக்கள் பார்த்து சிரித்தபடி சென்றனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்