முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் கிராமவாசி சுட்டுக்கொலை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் வெறி

செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

ஜமுயி, ஏப்.- 19  - பீகார் மாநிலத்தில் கிராமவாசி ஒருவரை ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். மேலும் தொலைத்தொடர்பு கோபுரங்களையும் அவர்கள் தீவைத்து கொளுத்தினர்.  பீகார் மாநிலம் ஜமுயி மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் அட்டகாசம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இம்மாவட்டத்தில் உள்ள தயாள்திக் என்ற கிராமத்திற்கு ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சிலர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அந்த கிராமத்தில் இருந்த பி.எஸ்.என்.எல்., ரிலையன்ஸ் தொலைத் தொடர்பு கோபுரங்களை அவர்கள் தீவைத்து கொளுத்தினர். நள்ளிரவு நேரத்தில் அந்த கிராமத்திற்கு வந்த இந்த தீவிரவாதிகள் தூங்கிக்கொண்டிருந்த கிராமவாசிகளை எழுப்பி வீட்டை விட்டு வெளியேறிச் செல்லுமாறு உத்தரவிட்டனர். அப்போது பீம்தாக்கூர் என்ற ஒரு கிராமவாசி பீதியில் அலறல் சத்தம் ஏற்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த மாவோயிஸ்ட்டுகள் அந்த கிராமவாசியை அதே இடத்தில் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த அந்த தீவிரவாதிகள் தப்பியோடினர். தப்பியோடிய தீவிரவாதிகளை கண்டுபிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை மும்முரமாக நடைபெறுகிறது.
ஜர்காண்ட, பீகார் மண்டல மாவோயிஸ்ட் தீவிரவாத தளபதி சமீர்தாஸ் என்பவரை போலீசார் 3 நாட்களுக்கு முன்பு கைது செய்ததை கண்டித்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் 24 மணி நேர பந்த்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago