முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலை துண்டிக்கப்பட்ட வீரர் குடும்பத்தினருக்கு தளபதி ஆறுதல்

புதன்கிழமை, 16 ஜனவரி 2013      இந்தியா
Image Unavailable

 

மதுரா,ஜன.17 - பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரர் லான்ஸ் நாயக் ஹெம்ராஜ் குடும்பத்தார்களை ராணுவ தலைமை தளபதி பிக்ரம் சிங் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக்கட்டுப்பாடு கோட்டை பாகிஸ்தான் ராணுவம் மீறி வந்து இந்திய ராணுவ வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 2 வீரர்கள் வீரமரணமடைந்தனர். அவர்களில் வீரர் ஹெம்ராஜ் என்பவரின் தலையை துண்டித்துக்கொண்டு சென்றுவிட்டனர். பாகிஸ்தானின் இந்த காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தோடு ஹெம்ராஜ் தலையை ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. ஹெம்ராஜ் பெற்றோர்களும் டெல்லி வந்து கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் உண்ணாவிரதம் இருந்தனர். பின்னர் ராணுவ தளபதிகள் கேட்டுக்கொண்டதிணங்க உண்ணாவிரதத்தை அவர்கள் கைவிட்டனர். 

இந்தநிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் மதுரா நகருக்கு அருகே ஒரு கிராமத்தில் உள்ள ஹெம்ராஜ் வீட்டுக்கு தலைமை தளபதி பிக்ரம் சிங் நேரில் சென்று ஹெமராஜ் குடும்பத்தினர்களுக்கு நேரில் ஆறுதல் கூறினார். அப்போது அவர் கூறுகையில் நான் ராணுவ தலைமை தளபதியாக இருப்பதால் உங்களை என் குடும்பத்தார்கள் போன்று கருதுகிறேன். என் குடும்பத்தார்களுக்கு (ஹெம்ராஜ்) ஆறுதல் கூறுவதற்காகவே நான் வந்துள்ளேன் என்று பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பிக்ரம் சிங் சோகத்துடன் கூறினார். ஹெம்ராஜ் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் ஆதரவும் அளிக்கப்படும் என்று அவர்களுக்கு நான் உறுதி அளித்துள்ளேன். நாட்டுக்காக ஹெம்ராஜ் அர்ப்பணித்துள்ளார். இதனால் நாடும் ராணுவமும் பெருமை அடைந்துள்ளது. ராணுவ விதிகளின்படி அந்த குடும்பத்திற்கு வழங்க வேண்டிய சலுகைகள் அனைத்தையும் முடிந்தளவு விரைவில் அளிக்கப்படும் என்றும் பிக்ரம் சிங் உறுதி அளித்தார். ஹம்ராஜ் குடும்பத்தார்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படும். அவர்களின் கோரிக்கைகளில் அவர்களுடைய கிராமத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட வேண்டும் என்பதும் ஒன்றாகும். இதுகுறித்தும் பரிசீலனை செய்யப்படும். பீம்ராஜ் தலையை திருப்பிக்கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் பிக்ரம் சிங் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago