பி.எஸ்.எல்.வி. சி-16 ராக்கெட் கவுண்ட் டவுன் துவங்கியது

செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011      இந்தியா

ஸ்ரீஹரிகோட்டா, ஏப். - 19 - பி.எஸ்.எல்.வி. சி-16 ராக்கெட்டுக்கான கவுண்ட் டவுன் நேற்று காலை 4.12 மணிக்கு துவங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சித்துறை விஞ்ஞானிகள் கடந்த டிசம்பர் மாதம் 25​ந் தேதி ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை விண்ணில் ஏவினார்கள். ஆனால் அந்த ராக்கெட் தொழில்நுட்ப கோளாறினால் நடுவானில் வெடித்து சிதறி விட்டது. இதையடுத்து உடனடியாக அடுத்த ராக்கெட்டை விண்ணில் ஏவும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக பி.எஸ்.எல்.வி.​சி 16 என்ற ராக்கெட் தயாரிக்கப்பட்டது. இதன் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு ஏவுவதற்கு தயார்படுத்தப்பட்டன. இந்த ராக்கெட் 20​ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணி 12 நிமிடத்தில் விண்ணில் ஏவப்படுகிறது. இதில் இந்தியாவுக்கு சொந்தமான ரிசோர்ஸ் சார்ட்​2 என்ற 1,206 கிலோ செயற்கை கோள் விண்ணுக்கு அனுப்பப்படுகிறது. இத்துடன் இந்தியா- ரஷியா கூட்டு தயாரிப்பான யூத் சாட் செயற்கை கோள், சிங்கப்nullரை சேர்ந்த நனியாங் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள எக்ஸ் சாட் செயற்கைகோள் ஆகியவையும் ராக்கெட்டில் வைத்து ஏவப்படுகின்றன.
யூத் சாட் செயற்கைகோள் 98 கிலோ எடையும், எக்ஸ் சாட் செயற்கைகோள் 106 கிலோ எடையும் கொண்டது. 3 செயற்கை கோள்களுமே இயற்கை வளம், மற்றும் பருவ நிலை ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட உள்ளன. ராக்கெட்டை செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் நேற்று அதிகாலை 4 மணி 12 நிமிடத்தில் தொடங்கியது. 20​ந் தேதி காலை 10.12 மணி ஆனதும் ராக்கெட்டில் தானாக தீப்பிடித்து உந்து சக்தி ஏற்பட்டு விண்ணில் பாயும். பின்னர் தரைகட்டுப்பாட்டு தளத்தில் இருந்து ராக்கெட்டை இயக்கி உரிய சுற்று வட்டப்பாதை வந்ததும் ஒவ்வொரு செயற்கை கோளாக விண்ணில் நிலை நிறுத்தப்படும்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்: