முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உணவு கெட்டுப்போனதாக கூறி ஊழியரை தாக்கிய சிவசேனா எம்.எல்.ஏ.

புதன்கிழமை, 9 ஜூலை 2025      இந்தியா
MLA 2025-07-09

Source: provided

மும்பை : மகாராஷ்டிரத்தில் உணவு கெட்டுப்போனதாகக் கூறி உணவக ஊழியரை, சிவசேனை எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் புல்தானா தொகுதி ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனை எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட். இவர் மும்பை சர்ச்கேட்டில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ளார்.

நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இரவு தனக்கும் தன்னுடன் இருந்தவர்களுக்கும் இவர் உணவு கேட்க, ஊழியர் ஒருவரும் உணவு கொண்டு வந்து கொடுத்துள்ளார். ஊழியர் கொண்டுவந்த பருப்பு குழம்பைச் சாப்பிட்டு பார்த்த எம்.எல்.ஏ., இது கெட்டுபோனது என்று கூறி உணவகத்திற்குச் சென்று ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதை சமைத்தவர் யார் என்று கேட்டு அவரை வரவழைத்து கடுமையாக முகத்தில் தாக்கியுள்ளார். இதனால் ஊழியர் கீழே விழுந்தார். இதுதொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

"உணவைச் சாப்பிட்டவுடன் எனக்கு வயிறு வலி, தலைச்சுற்றல் ஏற்பட்டது. எம்.எல்.ஏ.வுக்கே இந்த நிலைமை என்றால்.. மற்றவர்களுக்கு? நான் செய்தது தவறு அல்ல, இதற்காக நான் மன்னிப்பு கேட்க முடியாது. உணவு சரியில்லை என்று பல ஆண்டுகளாகக் கூறி வருகிறேன், கேட்கவில்லை என்றால் இப்படித்தான். நான் எம்.எல்.ஏ. மட்டுமல்ல, ஒரு போராளியும்கூட. சொல்வதை கேட்கவில்லை என்றால் பால் தாக்கரே எங்களுக்கு சொல்லி கொடுத்தது இதுதான். இது சிவசேனை ஸ்டைல். மகாராஷ்டிரத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதுகுறித்து சட்டப்பேரவையில் குரல் எழுப்புவேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து