Idhayam Matrimony

கடலூர் ரயில் விபத்திற்கு காரணம்? - வெளியான தகவலால் அதிர்ச்சி

புதன்கிழமை, 9 ஜூலை 2025      தமிழகம்
Cuddalore-train-accident-2

Source: provided

கடலூர் : ரயில் வரும் நேரத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தூங்கி கொண்டிருந்ததால் விபத்து நேரிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்திற்கு ரயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் வேன் தண்டவாளத்தை கடந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது.

ஆனால் இதனை மறுத்த தென்னக ரயில்வே, விபத்திற்கு வேன் ஓட்டுநரே காரணம் என்றும் வேன் ஓட்டுநரின் வற்புறுத்தலின் பேரிலேயே கேட் கீப்பர் கேட்டை திறந்ததாக கூறியது. இதற்கு வேன் டிரைவர் மறுப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், கேட் கீப்பரை பார்க்கவில்லை. கேட் திறந்தே இருந்தது. ரயில் வரும் ஒலிக்கூட கேட்கவில்லை என்று கூறினார்.

இந்த நிலையில், பயணிகள் ரயில் கடக்கும் முன் தொலைபேசியில் அழைப்பு வந்தும் பங்கஜ் சர்மா பதிலளிக்கவில்லை என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதிகாரி விமல் தொலைபேசியில் அழைத்த நிலையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா உறங்கி விட்டதாக கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து