Idhayam Matrimony

மத்திய அரசை கண்டித்து 'பந்த்': புதுச்சேரியில் கடைகள் அடைப்பு; தனியார் பேருந்துகள் ஓடவில்லை

புதன்கிழமை, 9 ஜூலை 2025      தமிழகம்
Pudhucherry-2023-03-23

புதுச்சேரி, மத்திய அரசை கண்டித்தும்,17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதுச்சேரியில் நேற்று (ஜூலை 9) பந்த் நடந்தது. கடைகள் அடைக்கப்பட்டு, தனியார் பேருந்து ஆட்டோ டெம்போக்கள் ஓடவில்லை. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடபட்டுள்ளது. அதே நேரத்தில், விடுமுறை எடுக்க அரசு ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசை கண்டித்தும், 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் நேற்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன. இதனையடுத்து புதுச்சேரியில் பந்த் அறிவிக்கப்பட்டது. இதன்படி நேற்று காலை பந்த் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் தொடங்கின.

இதன் காரணமாக புதுச்சேரியில் தனியார் பேருந்து ஆட்டோ டெம்போக்கள் ஓடவில்லை. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. திரையரங்குகள், மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. சிறிய கடை முதல் பெரிய நிறுவனங்கள் வரை மூடப்பட்டிருந்தன. பந்த் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்க கூடாது என அறிவுறுத்தியுள்ள தலைமைச் செயலகம், காலை 11 மணிக்குள் அனைத்து துறைகளிலும் வராதவர்கள் பெயர் பட்டியலை அனுப்ப உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே போலீஸ் பாதுகாப்புடன் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பந்த் போராட்டத்தை ஒட்டி தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள்,டெம்போக்கள் இயக்கப்படவில்லை. தமிழக மற்றும் புதுச்சேரி அரசின் பேருந்துகள் மட்டும் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து