முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சன்னரக நெல் குவிண்டாலுக்கு 1-க்கு ரூ.1350: அமைச்சர்

வெள்ளிக்கிழமை, 18 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.19 - முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுபடி கடந்த ஆண்டை விட சன்னரக நெல்லுக்கு ஊக்கத்தொகையாக ரூ.70 உயர்த்தி குவிண்டாலுக்கு ரூ.1350 எனவும் சாதரண ரக நெல்லுக்கு ரூ.50  உயர்த்தி 1300 என வழங்கப்படும் என உணவு துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுறள்ளதாவது:-

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி அத்தியாவசியப் பொருள்கள் கையிருப்பு, விநியோகம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நேற்று (18.1.2013)  தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம், சென்னை தலைமை அலுவலகத்தில் உணவுத் துறை அமைச்சர் இரா. காமராஜ்  தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் நடப்பு 2012 -​13 கரீப் நெல் கொள்முதல் பருவத்தில் பருவ மழை பொய்த்த போதிலும், தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய உரிய பங்கு தண்ணீர் கிடைக்காத நிலையிலும், குறுவை சாகுபடி முற்றிலும் நடைபெறாத நிலையிலும், சம்பா சாகுபடியும் சரிவர நடைபெறாத நிலையில் தமிழக விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விவசாயிகளின் துயர் துடைத்து, மும்முனை மின்சாரம் வழங்கி ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நெல் சாகுபடி செய்ய அனைத்து நடவடிக்கைககளையும் எடுக்க உத்தரவிட்டார்.

சென்ற நெல் கொள்முதல் பருவம்  2011 -12 ல் 23.82 இலட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்து 149 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது.  இந்த வருடமும் முதலமைச்சர் சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.70/​ம், சாதா ரக நெல்லுக்கு ரூ. 50/​ம் ஊக்கத் தொகையாக விவசாயிகளுக்கு வழங்க ஆணையிட்டுள்ளார்.  இதன்படி சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1350/​க்கும், சாதா ரக நெல் ரூ.1300/-க்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும்.

காவிரியில் போதுமான தண்ணீர் இல்லாதபோதும் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நெல் பயிரிட்டு அறுவடை துவங்கிய பின் வெளிச் சந்தையில் வியாபாரிகள் குறைந்த விலையில் கொள்முதல் செய்ய முற்படும்போது விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை குறைந்த விலையில் விற்க வேண்டிய சூழ்நிலை (க்ஷடுஙூசிஙுடீஙூஙூ ஙூஹங்டீ)உருவாவதைத் தவிர்க்கும் பொருட்டு குறைந்தபட்ச  ஆதார விலையுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள ஊக்கத் தொகையையும் சேர்த்து பெற்று பயன்பெறும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படவேண்டும்.  மாவட்ட ஆட்சியர், மக்கள் பிரதிநிதிகள் கோரும் இடங்களில் எல்லாம் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவையான அளவு திறக்கப்பட வேண்டுமென அமைச்சர் அறிவுறுத்தினார்.

இது தவிர நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் அனைத்து விவசாயிகள், கோயில் நிலங்கள் வசம் இருக்கும் நெல் முழுவதும் அவரவர் இடத்திலேயே கொள்முதல் செய்ய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.  அந்தந்த மாவட்டத்தில் உள்ள மண்டல மேலாளர் அலுவலுகத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் அவர்களது நெல் கொள்முதல் செய்யப்பட்டு, உரிய தொகை தலத்திலேயே வழங்கப்படும்.  

இக்கூட்டத்தில் பேசிய உணவுத்துறை அமைச்சர் பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே பச்சரிசி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் மாநிலத்திலுள்ள எல்லா மாவட்ட பொது விநியோகத் திட்ட கிடங்குகளுக்கும் 100 சதவிகிதம் நகர்வு செய்யப்பட்டு, கிடங்குகளிலிருந்து நியாய விலை அங்காடிகளுக்கும் ஒதுக்கீடு முழுவதும் இயக்கம் செய்யப்பட்டு ஜனவரி மாதத்தில் இதுவரை துவரம் பருப்பு 76 சதவீதமும், உளுத்தம்பருப்பு 72 சதவீதமும், செறிவூட்டப்பட்ட பாமாயில் 78 சதவீதமும் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளது.  அரிசி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது என்று கூறினார். 

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவினை சிரமேற்கொண்டு தரமான பச்சரிசி உள்ளிட்ட  பொங்கல்  பரிசு தொகுப்பு விநியோகத்தை உணவு, கூட்டுறவு மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் அற்பணிப்பு மனப்பான்மையுடன் செயல்பட்டு  சிறப்பாகச் செய்தமைக்காக அனைவரையும் பாராட்டினார்.

இக்கூட்டத்தில் உணவுத் துறை செயலர் எம்.பி. நிர்மலா, நிர்வாக இயக்குநர் எம். சந்திரசேகரன், கூட்டுறவுத் துறை கூடுதல் பதிவாளர் ஆர்.கார்த்திகேயன், டெல்டா, மற்றும் டெல்டா அல்லாத பிற மாவட்ட, மண்டல மேலாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்