முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர் திரைப்பட நிறுவனத்தில் பட்டயப்படிப்புகளுக்கு நிதி

வெள்ளிக்கிழமை, 25 ஜனவரி 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜன.26 - சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் திரைப்படம் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் நவீன டிஜிட்டல் திரைப்பட தயாரிப்புப் பணிக்காக தலா 3 ஆண்டு கால உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன் பட்டயப்படிப்புகளைத் தொடங்க ரூ.9.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எம்.ஜி.ஆர் அரசு  திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் 

திரைப்படத் தயாரிப்பு நுட்பங்கள் தொடர்பான இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதுதல், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, திரைப்படத் தொகுப்பு மற்றும் திரைப்படம் பதனிடுதல் ஆகிய ஐந்து பிரிவுகளில் மூன்றாண்டு பட்டயப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிறுவனத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் திரைப்படத்துறை, தொலைக்காட்சித்துறை, அரசு ஊடகத்துறை என பல்வேறு துறைகளில் வல்லுநர்களாக சிறந்து விளங்குகின்றனர்.

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கம் ஒவ்வொரு துறையிலும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் திரைப்படத் துறையிலும்  பல்வேறு புதிய  தொழில் நுட்பங்களுடன் கூடிய நவீன யுக்திகள்  உருவாகி வருகின்றன.

இந்த நவீன யுக்திகள் பற்றிய விவரங்கள் அனைத்தும் மாணவ, மாணவியர் அறிந்து, அவற்றின் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய திரைப்படங்களை தயாரிப்பதற்கு ஊக்குவிக்கும் வகையில், எம்.ஜி.ஆர் அரசு  திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் நவீன டிஜிட்டல் திரைப்படத் தயாரிப்புத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உயிர்ப்ட்டல்  மற்றும் காட்சிப்பயன்  பட்டயப்படிப்பினைத் தொடங்கிட  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  ஆணையிட்டுள்ளார். இதன்படி எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் எதிர்வரும் கல்வியாண்டு முதல் மூன்றாண்டு பட்டயப்படிப்புத் தொடங்கப்படும். இந்த மூன்று ஆண்டு  பட்டயம் வழங்கப்படும். அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் அங்கீகாரம் பெற்ற பட்டயப்படிப்பாக இது அமையும்.  

இப்பட்டயப் படிப்பில் ஓவியக் கலைத்திறன், திரைப்பட தொழில்நுட்பத்திறன், சிறந்த காட்சித்திறன் படைத்த பட்டதாரிகள் சேர  தகுதியுடையவர்கள் ஆவர்.

இந்த பட்டயப் படிப்பில் முதலாமாண்டு பயிற்சியின் போது ஓவியம் வரையும் திறன், திரைப்படத் தொழில்நுட்பத் திறன்களுக்கான பயிற்சிகள் அளிக்கப்படும்.  இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிற்சியில் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான அனிமேஷன் மற்றும் காட்சிப்பயன் பற்றிய வன்பொருள் மற்றும் மென்பொருள் பற்றிய சிறப்புப் பயிற்சியும், அது தொடர்பான திரைப்படத்துறையில் தொழில்முறை பயிற்சியும் அளிக்கப்படும். இந்த மூன்றாண்டு பட்டயப் படிப்பு திரைப்படத்துறைக்கென்றே வல்லுநர்களைத் தயார் செய்திடும்  தனிச் சிறப்புமிக்க பட்டயப்படிப்பாக அமைந்திடும்.

எம்.ஜி.ஆர் அரசு  திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக வழங்கப்படும் திரைப்படத் தொழில்நுட்பப் பயிற்சியின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாக அமையவிருக்கும், இந்த உயிர்ப்ட்டல்  மற்றும் காட்சிப்பயன்  மூன்று ஆண்டு பட்டயப் படிப்பினை தொடங்கிட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  ரூ.9.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளார்.

இவ்வாறு தமிழக அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தாய்ப்பால் பெருக | குழந்தை பிறப்பதற்கு முன்னும்,பிறந்த பின்னும் | தாய்ப்பால் கட்டிக்கொண்டு வலித்தல் தீர இளமை சுறுசுறுப்புடன் வாழுவதற்கு | உடல் உஷ்ணத்தை தணிக்க | முதுமை அடைவதை தடுத்து, உடல் பலம் பெற | உடல் பலவீனம் நீங்க சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள்
கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள் பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு