விஸ்வரூபம் படவழக்கு முடிவுக்கு வந்தது 7-​ம்தேதி தமிழகத்தில் வெளியாகிறது

திங்கட்கிழமை, 4 பெப்ரவரி 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, பிப்.- 5 - விஸ்வரூபம் திரைப்படம் குறித்து தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது என சென்னை உயர்நீnullதிமன்ற nullநீதிபதி கூறியுள்ளார்.   இதனையடுத்து விஸ்வரூபம் திரைப்படம்  வருகிற 7-​ம் தேதி தமிழகத்தில் வெளியாகிறது ஏற்கனவே விஸ்வரூபம் படத்துக்கான 144 தடை உத்தரவை நீnullக்க கோரி கமல் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை எதிர்த்து அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட nullநீதிபதி 144 தடை உத்தரவை நிறுத்தி வைத்தார். படத்தை ரிலீஸ் செய்ய அனுமதித்தார். இதனை எதிர்த்து அரசு சார்பில் ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.  தற்காலிக தலைமை nullநீதிபதி தர்மாராவ், nullநீதிபதி அருணா ஜெகதீசன் ஆகியோர் விசாரித்து மீண்டும் தடை விதித்தனர். இதனால் படம் 25-​ந்தேதி வெளியாகவில்லை.  இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனையின்படி முஸ்லிம் அமைப்பினரும், கமலஹாசனும் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் ஆகி உள்ளனர். அரசின் உள்துறை செயலாளர் ராஜகோபால் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. படத்தில் சர்ச்சைக்குரிய 7 காட்சிகளை nullநீக்க கமல் சம்மதித்து உள்ளார்.  எழுத்துப்nullர்வமான உடன்பாட்டில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.  இதைத்தொடர்ந்து விஸ்வரூபம் படத்துக்கு எதிரான வழக்குகளையும் போராட்டங்களையும் வாபஸ் பெறுவோம் என்று முஸ்லிம் பிரதிநிதிகள் ஜவாஹிருல்லா,​ அனீபா ஆகியோர் தெரிவித்தனர். கமலும் வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.  ஐகோர்ட்டில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு நீnullதிபதி ராஜேஸ்வரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சந்திரஹாசன் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.எஸ் ராமன், இந்த வழக்கு தொடர்பாக தங்களுக்கும் தமிழக அரசுக்கும் இடையே சுமூகமான உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், இந்த வழக்கை வாபஸ் பெறவிரும்புவதாகக் கூறி மனு தாக்கல் செய்தார். .அப்போது முஸ்லிம் அமைப்புகள் சார்பிலும் தனி தனி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் கோர்ட்டுக்கு வெளியே சமரசம் ஏற்பட்டுள்ளதாகவும் வழக்குகளை வாபஸ் பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தன. இதுபோல் அரசு சார்பில் விஸ்வரூபம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்படுவதாகவும், ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெறுவதாகவும் மனு தாக்கல் செய்டப்யப்பட்டன. அரசு தலைமை வழக்கறிஞர் நவnullநீதகிருஷ்ணன்,  இருதரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாகவும் வழக்கை வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட nullநீதிபதி விஸ்வரூபம் பட வழக்கை முடித்து வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து விஸ்வரூபம் பட பிரச்சினை முடிவுக்கு வந்தது.   எனவே இப்படம் விரைவில் திரையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விஸ்வரூபம் படத்தை தமிழகத்தில் வெளியிடும் தேதியை கமல்  நேற்று அறிவித்தார். அதன்படி, விஸ்வரூபம் வருகிற 7-​ம் தேதி தமிழகத்தில் வெளியாகிறது. இப்படம் வெளியாக உறுதுணையாக இருந்த தமிழக முதலமைச்சருக்கும், முஸ்லிம் சமுதாய மக்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: