திருமங்கலம் நகரில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வுப் பேரணி

திங்கட்கிழமை, 4 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

திருமங்கலம், பிப்.- 5 - திருமங்கலம் நகரில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் நடைபெற்ற உலக புற்றுநோய் தின விழிப்புணர்வுப் பேரணியில் பள்ளி, மாணவ, மாணவிகள் 600 பேர் கலந்து கொண்டனர். திருமங்கலம் வட்ட கிளை இந்திய செஞ்சிலுவை சங்கம் ஜெனிஸஸ் தொண்டு நிறுவனம் இணைந்து புற்றுநோய் தின விழிப்புணர்வுப் பேரணியை நடத்தினர். திருமங்கலம் வட்ட செஞ்சிலுவை சங்க தலைவர் மற்றும் வட்டாட்சியர் ராஜேந்திரன் ஆலோசனையின் பேரில் நடைபெற்ற பேரணிக்கு சங்க வட்டாரச் செயலாளர் தலைமை வகித்தார். திருமங்கலம் தாலுகா அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணியை நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மாரிமுத்து கொடியசைத்து துவக்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்த பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியபடி வந்தனர். புகையிலையினால் ஏற்படும் தீமைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை அவர்கள் விநியோகித்தனர்.இதில் போக்குவரத்து காவல் எஸ்.ஐ. சூசைரத்தினம், லெட்சுமணன் மற்றும் போலீஸார் , ஜெனிஸஸ் தொண்டு நிறுவனத்தினர், அரசு அதிகாரிகள் கலந்து
கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்: