முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடல் திரைப்படத்துக்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு - புகார்

செவ்வாய்க்கிழமை, 5 பெப்ரவரி 2013      சினிமா
Image Unavailable

சென்னை, பிப்.6: - இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்துள்ள கடல் திரைப்படத்தில் கிறிஸ்தவர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இருப்பதால், அந்த திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 6 காட்சிகளை நீக்கக் கோரி சென்னை பெருநகர காவல் ஆணையர்  எஸ்.ஜார்ஜியிடம் இந்திய கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியினர் திங்கள்கிழமை மனு கொடுத்தனர். அவர்கள் கொடுத்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:- மணிரத்னம் இயக்கத்தில்  அண்மையில் வெளிவந்துள்ள கடல் திரைப்படத்தில் கிறிஸ்தவர்களின் மனது புண்படும்படியாக 6 காட்சிகள் உள்ளன. பல இடங்களில்  பைபிள் வசனங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல கிறஸ்தவ பாதிரியார் பெர்க்மான்ஸை அவமதிக்கும் வகையிலும் இந்த திரைப்படத்தில் கதாபாத்திரங்கள் உள்ளன. எனவே இந்த திரைப்படத்துக்கு தடை விதிக்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் படத்தில் கிறிஸ்தவர்களைப் புண்படுத்தும் வகையில் உள்ள 6 காட்சிகளை நீக்குவதற்குரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago