மத்திய அரசிலிருந்து தி.மு.க. வெளியேறத் தயாரா? வைகோ

செவ்வாய்க்கிழமை, 5 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.6 - ராஜபக்சே வருகையை கண்டித்து மத்திய அரசிலிருந்து தி.மு.க. வெளியேறத் தயாரா? என்று கருணாநிதிக்கு வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். 

ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து பிப்ரவரி 8- ம் தேதி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்  வீட்டினை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க.வின் சீருடை அணிந்த தொண்டர் அணியினர் 100 பேர் ஆ.பாஸ்கரசேதுபதி தலைமையில் நேற்று  காலை 8.30 மணியளவில் எழும்nullரிலிருந்து புறப்படும் சம்பர் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் டெல்லி பயணத்தை தொடங்கினர். இந்த தொண்டர்களை பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி ஆகியோர் எழும்nullர் ரயில் நிலையம் வந்து உற்சாகப்படுத்தி வழி அனுப்பி வைத்தனர். இவர்களைத் தொடர்ந்து விமானம் மூலம் டெல்லி செல்லும் வைகோ முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்கிறார்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ராஜபக்சேவுக்கு எதிராக கருணாநிதியின் டெசோ போராட்டம் குறித்து விமர்சித்தார். தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது பதவியில் இருந்தவர்தானே கருணாநிதி. அப்போது தவறு செய்து விட்டோம், இப்போது உணர்ந்து எதிர்க்கிறோம் என்று ராஜபக்சே இந்தியாவில் நுழைவதை கண்டித்து மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க. விலகத் தயாரா? முன்னாள் முதல்வர் இதை அறிவிக்கத் தயாரா? என்று கேட்டார். ராஜபக்சே வருகையை கண்டிக்கும் விதமாக டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தவே ம.தி.மு.க.வினர் டெல்லி செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: