முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாடானை அருகே வெளிநாட்டு பறவைகளை வேட்டையாடிய 2பேர்கைது

ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

ராமநாதபுரம்,பிப்.- 11 - ராமநாதபரம் மாவட்டம் திருவாடானை அருகே வெளிநாட்டு பறவைகளை வேட்டையாடிய 2பேர் கைது செய்யப்பட்டனர்.  ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை சமயத்தில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வந்து நீர்நிலைகளில் கூடுகட்டி இனப்பெருக்கத்தில் ்டுபடுவது வழக்கம். இவ்வாறு வரும் வெளிநாட்டு பறவைகளை சிலசமூகவிரோதிகள் வேட்டையாடி வருகின்றனர். இதன்காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் வெளிநாட்டு பறவைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகின்றது. இதனால் பறவைகளை வேட்டையாடி பிடிப்பவர்களை கைது செய்ய வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை கீழக்கோட்டை கண்மாய் பகுதியில் வனச்சரகர் கணேசலிங்கம் தலைமையில் வனவர் ஜெயபால் உள்ளிட்ட வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ்டுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வலைவிரித்து வெளிநாட்டு பறவைகளை வேட்டையாடிய தேவிபட்டிணம் வடக்குத்தெரு ராமசாமி மகன் சுந்தரம்(வயது60), திருவாடானை சமத்துவபுரம் காளியப்பன் மகன் ராஜேந்திரன்(28) அகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10சிறகி வெளிநாட்டு பறவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்