ராமேசுவரத்தில் மீனவர் வலையில் அரியவகை கோல்டு சீலாமீன்

புதன்கிழமை, 13 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

ராமேசுவரம் பிப் 13 - பாம்பன் நாட்டுப்படகு மீனவர் வலையில் சிக்கிய அரியவகையான கோலடு; சீலா மீன் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 2700 க்கும் மேற்பட்ட அரியவகையான கடல்வாழ் உயிரினங்கள் அதிகளவில் கானப்படும் பகுதியாகும்,

இந்நிலையில் ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் துறைமுகத்தில் இருந்து நேற்று சுமார் 200 க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் ஏராளனமான மீனவர்கள் சீலா மீன் பிடிக்க சென்றனர். இதில் போரிஸ்டன் என்பவரது நாட்டுபடகில் 15 கிலோ எடை 5 அடி நீலம் கொண்ட அரிய வகையான மங்க நிறத்திலான கோல்டு சீலா மீன் சிக்கியது. இதனை கண்ட மீனவர் போரிஸ்டன் பாம்பன் கொண்டு வந்து மற்ற மீனவர்களிடம் காண்பித்தார்.இதனை கண்ட மீனவர்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். சீலா மீன்கள் கிலோ ரூ 250 முதல் ரூ 300 வரைக்கு விலைக்கு வியாபாரிகள் வாங்கி செல்லுவார்கள்  இந்த மீன் மிகவும் அரிய வகையாக உள்ளதால் அதிக விலைக்கு விற்பனை செய்யவுள்ளதாக தெரிவித்தனர்.அரியவகையான கோல்டு சீலா மீனை பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்

இதை ஷேர் செய்திடுங்கள்: