வடசென்னை ரேஷன் கடைகளில் அமைச்சர் திடீர் ஆய்வு

வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.15 - தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படி,  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு   வடசென்னை பகுதியில் உள்ள கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு நேற்று (14.2.2013) வடசென்னை பகுதியில் உள்ள கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, மின்ட் பகுதியில் உள்ள வடசென்னை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் நியாயவிலைக் கடை எண்.1, 2, 3, 4-ல் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டிய அத்தியாவசியப் பொருட்களான விலையில்லா அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் மற்றும் மானியவிலை துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, செறிவூட்டப்பட்ட பாமாயில் ஆகியன தடையின்றி எல்லா நேரங்களிலும் தேவைக்கேற்ப வழங்க வலியுறுத்தினார்.

பின்னர் பொருட்கள் வாங்க வந்த குடும்ப அட்டைதாரர்களின் குடும் அட்டைகளை வாங்கி பொருட்கள் வழங்கப்படும் பதிவேட்டுடன் சரிபார்த்ததுடன், மாதந்தோறும் வழங்கப்படும் அத்தியவசியப் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார். 

பொதுமக்கள் கூறிய குறைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட ஊழியர்களிடம் அமைச்சரா ல் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், முறையற்ற வகையில் பணிபுரிந்தமைக்கு பண்டகசாலையின் கூட்டுறவு சார் பதிவாளர் மற்றும் 2 விற்பனையாளர்களை உடனடி பணிக்கம் செய்து உத்தரவிட்டார். 

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆட்சியில் இலவச அரிசி உள்ளிட்ட அனைத்து பொருள்களும், தரமானதாகவும், எடை குறைவின்றியும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு உடனுக்குடன் வழங்கிட ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

மாதத்தில் முதல் வாரத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் ஒரே நேரத்தில் நியாயவிலைக் கடைகளுக்கு வருவதால், அதிக நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டு குடும்ப அட்டை வாரியாக சுழற்சி முறையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். குடும்ப அட்டைதாரர்கள் கேட்கும் பொருட்களை அவ்வப்போது வழங்க வேண்டும், அனைத்து பொருட்களும் ஒட்டுமொத்தமாக தான் வழங்கப்படும் என கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இவ்ஆய்வின்போது, கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்)  வி.கலையரசி,    இணைப்பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) டாக்டர் நா.வில்வசேகரன், ங்கநகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் ஆட்சியர் தேவகி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: