முக்கிய செய்திகள்

ம.பி. முதல்வருக்கு திக்விஜயசிங் யோசனை

dig Vijay singh

 

போபால்,ஏப்.22 - அரசியல் எதிரிகளை எப்படி சமாளிப்பது என்பது குறித்து மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகானுக்கு திக்விஜயசிங் யோசனை தெரிவித்துள்ளார். இது குறித்து திக்விஜயசிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

அரசியல் எதிரிகளை எப்படி சமாளிப்பது என்கிற விஷயத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் வாஜ்பாயிடம் இருந்து சிவராஜ்சிங் சவுகான் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். வாஜ்பாயிடம் பல நல்ல குணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தனது அரசியல் எதிரிகளை நைசாக சமாளிப்பது எப்படி என்பதுதான். இந்த விஷயத்தில் வாஜ்பாயிடம் இருந்து சவுகான் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக அவரிடம்(சவுகான்) முற்றிலுமாக அந்த குணம் இல்லை. எனவே வாஜ்பாயிடம் இருந்து நல்ல பழக்கங்களை கற்றுக் கொண்டு சவுகான் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: