மன்மோகன்சிங்கின் ஆட்சிக்காலம் மோசமானது அத்வானி காட்டமான பேச்சு

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2011      இந்தியா
ADVANI 0

 

கொல்கத்தா,ஏப்.- 23 - இப்போது நடைபெற்று வரும் மன்மோகன்சிங்கின் ஆட்சி இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான ஆட்சி என்று பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் தேர்தல் கூட்டத்தில் பேசிய அவர் மேலும் கூறியதாவது,  கடந்த 2008 ம் ஆண்டில் ஆட்சிக்கு ஆதரவாக எம்.பிக்களை விலைக்கு வாங்கி லஞ்ச ஊழலை பெரிய அளவில் தொடங்கியது மன்மோகன்சிங் அரசு. தொடர்ந்து 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி திட்ட ஊழல் என கிடைத்த இடத்தில் எல்லாம் ஊழல் செய்து எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு கோடிகளை சுருட்டியது மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு. அரசியல்வாதியாக இல்லாத மன்மோகன்சிங் ஆட்சிக்கு வந்த போது நான் அவர் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தேன். ஆனால் அவர் மிக மிக மோசமான ஆட்சி நடத்துகிறார். 1952 ம் ஆண்டில் இருந்து நான் நமது நாட்டில் நடைபெற்று வரும் ஆட்சியை கவனித்து வருகிறேன். இது வரை நடைபெற்ற ஆட்சிகளிலேயே மிகவும் மோசமானது மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சிதான் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: