முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐகோர்ட்டில் லெனின் மயங்கி விழுந்தார்

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர்,ஏப்.- 23 - கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு விசாரணையின் போது நித்யானந்தாவின் முன்னாள் சீடர் லெனின் மயங்கி விழுந்தார்.  பெங்களூர் பிடதியில் ஆசிரமம் அமைத்து நிர்வகித்து வரும் சாமியார் நித்யானந்தா மீது செக்ஸ் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக நித்யானந்தா மீது கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அவரது முன்னாள் சீடர் லெனினும் அவர் மீது வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தன் மீது விதிக்கப்பட்டிருந்த ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்துமாறு நித்யானந்தா மனுத்தாக்கல் செய்திருந்தார். நேற்று இந்த வழக்கு நீதிபதி பச்சாபுரே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. லெனினும் கோர்ட்டுக்கு வந்திருந்தார். அப்போது நித்யானந்தாவின் வக்கீல் கூறுகையில், 

நித்யானந்தாவின் ஜாமீன் கடந்த வாரமே தளர்த்தப்பட்டது. ஆனால் சில எழுத்தர்களின் தவறுதல்களால் நிபந்தனை தளர்வு வெளியே தெரியவில்லை. எனவே நிபந்தனை தளர்வு பற்றி மீண்டும் கோரிக்கை வைப்பதாக கூறினார். இதற்கு அரசு வக்கீல் பதிலளிக்கையில், ஏற்கனவே இதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் மீண்டும் கோருவது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றார். பின்னர் நீதிபதி பச்சாபுரே கூறுகையில், 

சாமியார் நித்யானந்தாவின் ஜாமீன் நிபந்தனைகள் மூன்று மாதம் தள்ளி வைக்கப்படுகிறது. இந்த வழக்கை தொடர்ந்த லெனின் கோர்ட் குறித்து அவதூறாக பேசி வருகிறார். நித்யானந்தா கோர்ட் நடவடிக்கைகளில் தலையிட்டு சாட்சியங்களை கலைப்பதாக திசை திருப்பும் நோக்கில் லெனின் ஈடுபடுகிறார். இது போன்ற நடவடிக்கைகளால் லெனினுக்கு சிறைத் தண்டனை வழங்கவும் வாய்ப்புள்ளது என்றார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த லெனின் கோர்ட்டில் மயங்கி விழுந்தார். அவரை கோர்ட் ஊழியர்கள் கைதாங்கலாக வெளியே அழைத்து சென்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago