உலக மகளிர் தினம்: தலைவர்கள் வாழ்த்து

March 7, 2013 தமிழகம்
Stalin-karu-Ramadoss-Vijayakanth(c) 1

 

சென்னை, மார்ச்.8 - உலக மகளிர் தினத்தையொட்டி பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.    தி.மு.க. தலைவர் கருணாநிதி:    மார்ச் திங்கள் 8ஆம் நாள் உலக மகளிர் நாள். மக்கள் தொகையில் சரிபாதியாக விளங்கும் மகளிர் சமுதாயம் அனைத்து வகையிலும் முன்னேறவேண்டும் என்பதற்காக உலகெங்கும் கொண்டாடப்படும் எழுச்சித் திருநாள். ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் மகளிர்க்குத் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையையும், வேட்பாளராகப் போட்டியிடும் உரிமையையும் முதன்முதலில் பெற்றுத் தந்தது nullநீதிக் கட்சி. அந்த நீnullதிக் கட்சியின் வழியில் திராவிட இயக்கத்தை வழிநடத்திய தந்தைபெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் அறிவுறுத்திய நெறியில் மகளிர்சமுதாயம் முன்னேற்றம் காண்பதற்காக திராவிட முன்னேற்றக் கழக அரசுஅமையும் காலங்களில் உருவாக்கிச் செயல்படுத்திய பல்வேறு திட்டங்களை  புதிது புதிதாக உருவாக்கி, நடைமுறைப்படுத்தியதால் பெண்கள் சமுதாயம் இன்று சமூக, அரசியல், பொருளாதார நிலைகளில் எழுச்சி பெற்று, ஏற்றம் கண்டுவருவதை எண்ணி எண்ணி இறும்nullதெய்தும் இதயத்துடன், மகளிர் சமுதாயம் மேலும் மேலும் அறிவிலும் ஆற்றலிலும் ஒற்றுமையுடன் சிறந்தோங்கிச் செழித்திட  உளமார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் :   தாய் மொழி, தாய் நாடு என்று தாயை முன்னிறுத்தி வழிபடும் தேசம் இது. பெண்கள் முன்னேற்றம் என்பது சுதந்திர இந்தியாவில் முக்கியமாக கருதப்பட்டு, பெண்களுக்கான நல சட்டங்களை நிறைவேற்றி வந்திருக்கிறது. இரண்டு பெண் முதலமைச்சர்களை இந்த நாடு பெற்றிருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சிகளில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இந்திய நாடாளுமன்ற சபாநாயகராக ஒரு பெண்ணும், நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவராக ஒரு பெண்ணும் அமர்ந்திருக்கிற காட்சியை இந்த நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது. பல்வேறு உயர் பதவிகளில் பெண்கள் தலைமை தாங்குகிற ஒருநிலை இன்றைக்கு சமுதாயம் பெற்றிருக்கிறது.   தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:    சமுதாயத்தில் சரிபாதியாக இருப்பவர்கள் பெண்கள். ஒரு சமுதாயம் முன்னேற வேண்டுமானால் அவர்களும் அந்த வளர்ச்சியில் பங்கு பெற வேண்டும். அதற்குரிய தகுதிகளைப் பெற சமூக, அரசியல், பொருளாதார வளர்ச்சியில் அவர்கள் முழு பங்கு பெற வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் மூலம் ஓரளவு வாய்ப்புகளை அவர்கள் பெற்றுள்ளனரே தவிர, இன்னும் போதுமான முன்னேற்றம் ஏற்படவில்லை. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பெண்களாக இருக்க வேண்டும் என்ற சட்டம் இன்னும் நிறைவேறவில்லை என்பதே இதற்கு எடுத்துக்காட்டு.இந்த நன்னாளில் அவர்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி நல்வாழ்வு பெற  மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.   மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன்:     8 மணி நேர வேலை, வாக்குரிமை, உலக சமாதானம் ஆகிய முப்பெரும் கோரிக்கைகளை முன்வைத்து, 1910​ல் கோபன்ஹேகனில் கூடிய இரண்டாவது உலக சோஷலிசப் பெண்கள் மாநாட்டில், சோஷலிச இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான கிளாரா ஜெட்கின் முன்மொழிந்த பிரகடனத்தின் அடிப்படையில், உலகெங்கும் நடக்கும் பெண்களின் போராட்டங்களுக்குப் பரஸ்பரம் ஆதரவும், ஒத்துழைப்பும் தருவதற்கான தினமாக உருவானது தான், உலகப் பெண்கள் தினம். 100 ஆண்டுகளுக்கு மேல் கடந்த பின்னும், அந்தக் கோரிக்கைகளின் தேவை, இன்னும் nullநீடிக்கிறது. நவீன தாராளமயக் கொள்கைகளின் பின்னணியில் தொழிலாளர் நல சட்டங்கள் பின்னடைவு, தொழிற்சங்க உரிமைகள் மறுப்பு, மொத்த உழைப்பாளிகளில் 93 சதவிகிதமாக உள்ள முறைசாரா துறையினருக்கு சட்டப் பாதுகாப்பின்மை, வாழ்வதற்கேற்ற கூலி கிடைக்காமை என்ற பல தாக்குதல்களை, பெண் தொழிலாளிகளும் சந்தித்துக் கொண்டுள்ளனர். விவசாயத்தில், கட்டுமானத்தில், நெசவுத் தொழிலில், உப்பளத்தில், தையலில், ஏற்றுமதி வளாகங்களில், சுமங்கலி திட்டத்தில், இன்ன பிற துறைகளில் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகி வருகின்றனர். வீட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கால்சென்டர், தகவல் தொழில்நுட்பத் துறைகளிலும் கூட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. வெளி மாநிலங்களிலிருந்து குடிபெயர்ந்து இங்கு வந்து வேலை செய்யும் தொழிலாளர்கள், குறிப்பாக, பெண்களின் நிலை, மிக மோசமாக உள்ளது. ஊரக வேலை உறுதி திட்டத்தில், சட்டக் கூலி கிடைப்பதில்லை. தனித்து வாழும் பெண்கள் கண்ணியமாக வாழ உதவும் சில்லறை வர்த்தகத் துறை, பன்னாட்டு நிறுவனங்களின் லாபவேட்டைக்குப் பலிகடாவாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் அத்தனையும் தொடர்ந்து உயரும் விலைவாசிக்கு மத்தியில் செய்யப்படுவதுதான் சொல்ல முடியாத கொடூரம். 33 சதவிகித இட ஒதுக்கீடு இன்னும் சட்டமாகவில்லை. உள்ளாட்சி நிர்வாகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் முழுமையாக சுயமாக செயல்படும் சூழல் இல்லை. பாலின சமத்துவத்துக்கான போராட்டம் ஒருபுறம் ஜனநாயகத் தேவையாகவும், மறுபுறம் சமூக மாற்றத்துக்கான இயக்கத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது. இத்தகைய போராட்டங்கள் பல முனைகளில் துடிப்புடன் எழுவதை மார்க்சிஸ்ட் கட்சி ஆதரிக்கும், ஊக்குவிக்கும் என்பதுடன், தமிழகத்தில் இவற்றைக் கட்சியின் சார்பில் முன்னெடுத்துச் செல்லவும் உறுதியேற்று உலகப் பெண்கள் தின வாழ்த்துக்களை, உரித்தாக்கிக் கொள்கிறேன்.  இவ்வாறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்ற வாரம்

Meenakshi-Temple 0

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணைய தளம் முடக்கம்

மதுரை - மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணைய தளம் திடீரென்று முடக்கப்பட்டுள்ளது. இதில் தீவிரவாதிகள் ...

Madan Mitra1(C)

சாரதா நிதி மோசடி வழக்கு: நீதிபதியிடம் அழுத அமைச்சர்

கொல்கத்தா - சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மேற்கு வங்க மாநில அமைச்சர் மதன் மித்ரா, சிபிஐ காவலுக்கு அனுப்பாதீர் என நீதிபதியிடம் கண்ணீர் விட்டு கதறி அழுதார். ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்து நாளை வரை சிபிஐ விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். மேற்குவங்கம் ...

Smriti Zubin Irani(C)

'ஆல் இஸ் வெல்' படத்திலிருந்து ஸ்மிருதி இராணி விலகல்

மும்பை - 'ஆல் இஸ் வெல்' எனும் இந்தித் திரைப்படத்தில் இருந்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி விலகியுள்ளார். ...

Actor Vijay(C)

குடும்பத்தை கவனிக்காத ரசிகர் தேவையில்லை: நடிகர் விஜய்

திருநெல்வேலி - ‘தனது குடும்பத்தை கவனிக்காத ரசிகர் தேவையில்லை’ என, திருநெல்வேலியில் நடிகர் விஜய் பேசினார். ...

Venkaiya-Naidu2(C) 0

மக்களுக்கு இலவசங்கள் வழங்க கூடாது: வெங்கய்யா

நகரி - மத்திய நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு திருப்பதியில் நடந்த விழாவில் கலந்து கொண்டு...

ar-rahman

ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான்

வாஸ்ஏஞ்சல்ஸ் - திரையுலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இசையமைப்பாளர் ...

digvijay singh 2

காங்கிரசில் நக்சலைட்டுகள் சேர வேண்டும்: திக்விஜய்சிங்

பனாஜி - பாரதிய ஜனதாவை வீழ்த்த காங்கிரஸ் கட்சியில் நக்சலைட்டுகள் சேர வேண்டும் என்று அக் கட்சியின் மூத்த ...

Miss-south-africa(C)

தென் ஆப்பிரிக்க பெண் உலக அழகியாக தேர்வு

லண்டன் - தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 22 வயதான ரோலென் ஸ்ட்ராஸ், 2014-ஆம் ஆண்டின் உலக அழகியாகத் ...

Pak-school rampage(C)

பாக். ராணுவ பள்ளியில் தலிபான் தீவிரவாதிகளின் வெறியாட்டம்: 132 பேர் பலி

பெஷாவர் - பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவம் நடத்தி வரும் பள்ளிக்குள் நுழைந்த தலிபான் தீவிரவாதிகள் நடத்திய வெறித்தனமான கொடூரத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 132 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 125 பேர் படுகாயமடைந்துள்ளனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 6 ...

Chandrika(C)

இலங்கையில் தேர்தல் நாளில் கலவரம் வெடிக்கும்: சந்திரிகா

கொழும்பு - இலங்கையில் வருகிற 8ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் தற்போதைய ஜனாதிபதி ராஜபக்சே மீண்டும் ...