வாடிகன், மார்ச். 21 - ஏழை மக்கள் வாழ்க்கைத் தரம் உயர பாடுபடுவேன் என்று புதிய போப்பாண்டவர் கூறினார். அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரான்சிஸ் புதியபோப்பாண்டவராகப் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
கத்தோலிக்க தேவாலயங்கள் ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவற்றின் நோக்கம் ஏழைகளுக்கு சேவை செய்யும் வகையில் இருக்க வேண்டும். புனித பிரான்சிஸ் அசிசியார் சமாதானத்தின் அடையாளமாகவும், ஏழைகளுக்கு சேவை செய்தும் வாழ்ந்து வந்தார்.
சமாதானத்தை நமக்கு அளித்த அவரது பெயர் எனக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவரைப் போன்றே எனது பணியும் ஏழைகளை மையமாக வைத்தே இருக்கும் என்று அவர் கூறினார்.