பாக்., அகதிகள் முகாமில் குண்டு வெடித்ததில் 12 பேர் பலி

வியாழக்கிழமை, 21 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

பெஷாவர்,  மார்ச், 22 - பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் காரில் வைத்திருந்த குண்டு வெடித்ததில் 12பேர் உயிரிழந்தனர். இதில் 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பெஷாவருக்கு அருகிலுள்ள ஜலோசாய் என்ற இடத்தில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள இந்த பகுதியில்  தலிபான்கள், அல்-கொய்தா இயக்கத்தை சேர்ந்தவர்கள் கடும் செல்வாக்கு பெற்ற நிலையில் உள்ளனர். இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று மாவட்ட போலீஸ் அதிகாரி முகமது உசேன் தெரிவித்தார்.

காரில் வைத்திருந்த குண்டு வெடித்ததையும், 12 பேர் இறந்ததையும்  உள்ளாட்சி நிர்வாக அதிகாரி அயாஸ்கான் மன்டோகல் உறுதி செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: