முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம்: ஜனாதிபதி ஒப்புதல்

புதன்கிழமை, 3 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லிஸ, ஏப். 4 - பாலியல் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்ததை அடுத்து பாலியல் வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 19 ம் தேதி நாடாளுமன்ற மக்களவையிலும், 21 ம் தேதி மாநிலங்களவையிலும் பாலியல் வன்கொடுமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. இதையடுத்து, புதிய சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியிருக்கிறார். பாலியல் வன்கொடுமையில் ்ஈடுபடும் குற்றவாளிக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்க இந்த சட்டம் வழி செய்கிறது. குற்றத்தின் தன்மையைக்கேற்ப மரணத் தண்டனை அளிக்கவும் பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் - 2013 ல் இடமுள்ளது. 

பாலியல் வன்கொடுமைக் குற்றங்களில் ஈ்டுபடுவோருக்கு குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது. அமில வீச்சு, பெண்களை ரகசியமாகப் பின்தொடர்தல், தொல்லை தருதல் உள்ளிட்ட பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்க இந்த மசோதாவில் வழிவகுக்கப்பட்டுள்ளது. பெண்கள், சிறுமியர் ஆகியோரைப் பாதுகாப்பதற்கான சிறப்பு அம்சங்கள் திருத்தப்பட்ட இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளது. மேலும் பாலியல் குற்றங்களுக்காக விதிக்கப்படும் ஆயுள்தண்டனையை, குற்றம் புரிந்தவர் தமது வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க வேண்டும் என்பதையும் இந்த மசோதா உறுதி செய்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago