காஞ்சிபுரம் அருகே மோதல் - போலீஸ் குவிப்பு

no image 12

 

காஞ்சிபுரம், ஏப்.26 - தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறில் 3 பேர் அரிவாள் வெட்டில் படுகாயமடைந்தனர். பலருக்கு உருட்டுக்கட்டை அடி விழுந்தது. வீடுகள் சூறையாடப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. 

இது குறித்த விபரம் வருமாறு:-

காஞ்சீபுரம் அருகே உள்ள ஓரிக்கை, தும்பவனம் காட்டுப் பகுதியில் ஒரு கும்பல் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகின்றனர். நேற்று இரவு சில வாலிபர்கள் அந்த பகுதி அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். இதனை பார்த்ததும் சாராயக் கும்பலை சேர்ந்த சிலர் அந்த வாலிபர்களிடம் எப்படி எங்கள் ஏரியாவுக்குள் அமர்ந்து மது குடிக்கலாம் என்று கூறி தகராறில் ஈடுபட்டனர்.

அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஒருவரை யொருவர் தாக்கிக் கொண்டனர். இது பற்றி தெரிந்ததும் சாராயக் கும்பலை சேர்ந்த மேலும் 20​க்கும் மேற்பட்டோர் கத்தி, அரிவாள், உருட்டுக் கட்டை போன்ற பயங்கர ஆயுதத்துடன் அங்குவந் தனர். அவர்களை பார்த் ததும் மோதலில் ஈடுபட்ட வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓரிக்கை, தும்பவனம் பகுதிக்கு ஓட்டம் பிடித்தனர். அவர்களை விடாமல் சாராய கும்பல் விரட்டிச் சென்றனர். வாலிபர்கள் அவர்களிடம் இருந்து தப்பி மறைவான இடத்தில் பதுங்கிக் கொண்டனர். 

இதனால் ஆவேசமடைந்த அந்த கும்பல் கத்தி, அரிவாளுடன் ஊருக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனை பார்த்து ரோட்டில் நின்றவர்கள் பீதி அடைந்தனர். அவர்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். வீட்டில் இருந்த ஆண்களும், பெண்களும் வெளியே வர பயந்து கதவுகளை nullட்டிக் கொண்டு உள்ளேயே இருந்தனர். ஒவ்வொரு தெருவாக சுற்றி வந்த சாராய கும்பல் தங்கள் கண்களில் பட்ட வாகனங்கள், வீட்டு கதவுகளில் கற்களை தூக்கி வீசி எறிந்தனர். 

காந்திநகர் பகுதியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய அமைப் பாளர் டேவிட் என்பவரது வீட்டையும் அவர்கள் நொறுக்கினர். ஜன்னல், கதவுகளில் கற்களை வீசினர். மேலும் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த கார், பைக், லாரியை அடித்து உடைத்தனர். வீட்டில் யாரும் இல்லாததால் அவர்கள் உயிர்தப்பினர்.   

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் சிலர் அவர்களை தட்டிக்கேட் டனர். கோபம் அடைந்த அவர்கள் குமாரி, தன்ராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவர்களுக்கு கை, கழுத்து உடலில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்களை மிரட்டி எச்சரிக்கை விடுத்து விட்டு அந்த கும்பல் தப்பி ஓடி விட்டனர்.

 இது குறித்து தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர், நகர போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ் பெக்டர்கள் சரவணன், பாலசுப்பிர மணியன், சாந்தாராஜி, சிவபாத சேகரன் மற்றும் அதிரடி போலீசார் சுமார் 100​க்கும் மேற்பட்டோர் அங்கு வந்தனர். அவர்கள் பலத்த காயம் அடைந்த 3 பேரையும் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்பகுதியில் மேலும் மோதல் ஏற்பட்டாமல் இருக்கும் வகையில் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர். 

இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். மோதலில் ஈடுபட்ட ஓரிக்கை, தும்பவனம், பொய்யாகுளம், பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்த வடிவேலு, ஸ்ரீதர், தினேஷ், செல்லப்பன், சின்னையன், வரதன், கருணாகரன், வாசுதேவன், வேலு, கான் ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பலரை வலை வீசி தேடிவருகிறார்கள்.  சாராயகும்பலுக்கு தலை வராக அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் இருப்பது தெரிய வந்துள்ளது. அவரது தூண்டுதலின் பேரிலேயே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. அவரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ