எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லண்டன், ஏப். 5 - உடல் பருமனை குறைக்க உதவும் மைக்ரோ சிப் மின்னனுக் கணினிச் சில்லு ஒன்றை தாங்கள் உருவாக்கியுள்ளதாகவும் அதை விரைவில் முழுமையாக ஆய்வு செய்த பின் வெளியிடும் போது மனித குலத்திற்கே பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று லண்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் மைக்ரோ சிப்களை உடலில் பொருத்திக் கொண்டவருக்கு அதிகம் பசிக்காது.
மூளைக்கு பசியை உணர்த்துவதிலும் உடலின் வேறு பல வேலைகளைக் கட்டுப்படுத்துவதிலும் உதவுவது வேகஸ் நர்வ்ஸ் எனப்படும் நரம்பில் சேர்ந்து இருப்பது போல இந்தச் சிப் உடலில் பொருத்தப்பட உள்ளது. இப்போது விலங்குகளில் இந்தக் கண்டுபிடிப்பைப் உபயோகித்துப் பார்க்கும் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. மூன்று ஆண்டுகளில் மனிதர்களிடமும் இவை பரிசோதிக்கப்படும் என்று இது சம்பந்தமான ஆய்வுகளைச் செய்துவரும் லண்டன் இம்பீரியல் காலேஜைச் சேர்ந்த பேராசிரியர் கிறிஸ் டூமாஸு மற்றும் பேராசிரியர் சர் ஸ்டீடிபன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
வேகஸ் நரம்புகளில் பொருத்தப்பட்ட இந்தச் சிப்புகள் பசி தொடர்பான இரசாயன அறிகுறிகளை புரிந்துகொள்ளும் என்றும், அதிகமான பசியை உணர்த்தாத வகையில் மூளைக்கு மின்னனு சமிக்ஞைகளை அனுப்புமாம். அளவாகவும் மெதுவாகவும் சாப்பிட வைப்பது போல இந்த சிப்புகள் மூலம் மூளைக்கு சமிக்கைளை அனுப்ப முடியும் என்று பேராசிரியர் டூமாஸூ பிபிசியிடம் தெரிவித்துள்ளார். காக்காய் வலிப்பைக் கட்டுப்படுத்துவதில் உதவக்கூடிய வகையில் வேகஸ் நரம்புகளில் பொருத்தப்படும் மைக்ரோச்சிப் சில்லுகளை இதே இம்பீரியல் காலேஜ் ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே உருவாக்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |