முன்னாள் போப் ஆரோக்கியமாக இருக்கிறார்: பி.ஆர்.ஓ

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2013      ஆன்மிகம்
Image Unavailable

வாடிகன்சிட்டி, ஏப். 13 - போப் 16 ம் பெனடிக் ஆரோக்கியமாக இருப்பதாக வாடிகன் சிட்டி மக்கள் தொடர்பாளர் பெட்ரிக் லொம்பார்டி தெரிவித்துள்ளார்.  265 வது போப்பாக இருந்து சமீபத்தில் பதவி விலகியவர் 16 ம் பெனடிக்ட். உடல் நலக் குறைவு காரணமாக கடந்த பிப்ரவரியில் பதவி விலகினார். தற்போது பெனடிக்டின் உடல்நிலை கடந்த 2 வாரங்களாக மிகவும் மோசமடைந்து வருவதாக வாடிகன் தினசரி ஒன்று செய்தி வெளியிட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் வாடிகன் மக்கள்தொடர்பாளர் பெடரிக் லொம்பார்டி. இது குறித்து அவர் கூறுகையில், வாடிகனில் வெளிவரும் தினசரியில் முன்னாள் போப் 16 ம் பெனடிக் உடல் நலம் குன்றி , மோசமான நிலையில் இருப்பதாக செய்தி வெளியிட்டது. முன்னாள் போப் குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திகள் உண்மையில்லாதவை. அவர் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார். தயவுசெய்து இது போன்ற தவறான செய்திகளை மக்கள் நம்பவேண்டாம் என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: