Idhayam Matrimony

ஆர்டர்லி முறையை ஒழிக்க கலெக்டர் தலைமையில் மாவட்டம்தோறும் குழு தமிழ்நாட அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 8 ஜனவரி 2026      தமிழகம்
chennai-high-court 2025-01-01

சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிக்க மாவட்டம் தோறும்  கலெக்டர் தலைமையில் குழு அமைக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.

போலீஸ் உயர் அதிகாரிகளின் வீடுகளில் போலீஸ்காரர்களை ஆர்டர்லியாக வேலைக்கு அமர்த்துவதை தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டது. ஆனாலும், ஆர்டர்லி முறை நடைமுறையில் இருந்தது. இதுதொடர்பான வழக்கை ஐகோர்ட் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் விசாரித்து உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். 

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன், ஆர்டர்லி முறையை பின்பற்றக்கூடாது என மாநில அளவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார். வேண்டுமானால் இதனை கண்காணிக்க மாநில அளவில் குழு அமைக்கலாம் என்றும் யோசனை தெரிவித்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ''ஆர்டர்லி முறை ஒழிக்கவும், ஆர்டர்லி முறை குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் தலைமையில் குழுவை அமைக்கிறோம். அந்த குழுவில் மாவட்ட வருவாய் அதிகாரி, 2 போலீஸ் அதிகாரிகள் இடம் பெற வேண்டும். இந்த குழு அமைப்பது தொடர்பான உத்தரவை 2 வாரங்களில் உள்துறை செயலாளர் உத்தரவிட வேண்டும். விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்'' என்று உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து