பெண்ணை கொன்ற பாகிஸ்தானியரின் தலை துண்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

 

ரியாத், ஏப்.15 - சவூதி அரேபியாவில் பெண்ணை கற்பழித்து கொலை செய்த பாகிஸ்தான் வாலிபரின் தலை துண்டிக்கப்பட்டது. சவூதி அரேபியாவில் இஸ்லாமிய சட்டம்  கடை பிடிக்கப்படுகிறது. இங்கு கற்பழிப்பு, கொலை , கொள்ளை,  போதை மருந்து கடத்தல், போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி அங்கு ஒரு பெண்ணை கற்பழித்து கொன்ற பாகிஸ்தான் வாலிபரின் தலையை துண்டித்து தணடனை நிறைவேற்றப்பட்டது. அந்த நபரின் பெயர் அம்ஜத்அலிகோல்(40). பாகிஸ்தானை சேர்ந்த இவர் சவுதி அரேபிய பெண்ணிடம் கொள்ளையடிக்க சென்றார். ஆனால் அந்த பெண்ணின் அழகில் மதிமயங்கிய அவர் அந்த பெண்ணை கற்பழித்து கழுத்தை நெருக்கி கொலை செய்தார். அவரை கைது செய்த போலீசார் அவர் மீது கொலை வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட் அவரது தலையை துண்டித்து தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டது. அதன்படி அவரது தலை துண்டிக்கப்பட்டது. இவரையும் சேர்த்து சவுதி அரேபியாவில் இந்த ஆண்டு இதுவரை 33 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2012 ம் ஆண்டு 76 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: