முக்கிய செய்திகள்

ஜெயலலிதா முதல்வராக வேண்டி அ.தி.மு.க.வினர் தேர் இழுப்பு

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011      தமிழகம்
palani

 

பழனி,ஏப்.27 - அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழக முதல்வராக வேண்டி பழனி முருகன் மலைக்கோயில் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் தங்க தேர் இழுத்தனர். 

பழனி முருகன் மலைக் கோயிலில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், விஸ்வநாதன், ஒட்டன்சத்திரம் தொகுதி வேட்பாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் வேடசந்தூர், அரியலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்கள் ஆகியோர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல்வராக வேண்டி தங்கத் தேர் இழுத்தனர். இந்த நிகழ்ச்சியில் பழனி நகர செயலாளர் பரதன், ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லச்சாமி, பழனி சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் மகுடீஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: