முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்துக்களை இழிவுபடுத்தி பேச்சு: கருணாநிதிக்கு நோட்டீஸ்

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.20 - இந்துக்களை இழிவுப்படுத்தி பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு நோட்டீஸ் அனுப்புமாறு வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு குறித்த விபரம் வருமாறு:-

தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த 2005 ம் ஆண்டு சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் போது ``இந்துக்கள் என்றால் திருடன்''  என்று குறிப்பிட்டார்.

இது தொடர்பாக மாம்பலம் பகுதியை சேர்ந்த  கவுதமன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஐகோர்ட் உத்தரவுக்குப் பின்னர் கருணாநிதிக்கு மாம்பலம் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

2006ம் ஆண்டில் இந்த வழக்கை கைவிடுவதாக மாம்பலம் போலீசார் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் புகார் கொடுத்த கவுதமன் கருணாநிதி எதிராக தான் கொடுத்த புகார் தொடர்பான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. 

போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல்கள் சண்முக வேலாயுதம், இன்பதுரை ஆகியோர் மாம்பலம் போலீஸில் கருணாநிதி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு கைவிடப்பட்டுள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக இந்த குறித்து புகார்தாரரான மனுதாரர் கவுதமனுக்கு தெரிவிக்கப்படவில்லை. தேவைப்பட்டால் அது தொடர்பான ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்ய தயாராக உள்ளோம் என்று தெரிவித்தார்.

இதையெடுத்து நீதிபதி கிருபாகரன்  இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு நோட்டீஸ் அனுப்புமாறு மனுதாரர் தரப்பு வக்கீலுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 23 ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்