முக்கிய செய்திகள்

சாந்திபூஷன் மீது கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது - கிரண்பேடி

KiranBedi

 

காஜியாபாத்,ஏப்.28 - பிரபல வழக்கறிஞரும் முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான சாந்திபூஷன் மீது சி.டி.விவகாரத்தில் குற்றச்சாட்டு சுமத்தியிருப்பது பொய்யானது என்று முன்னாள் ஐ.பி.எஸ். பெண் அதிகாரி கிரண்பேடி கூறியுள்ளார். 

ஊழலை ஒழிக்க அமைக்கப்பட்டுள்ள லோக்பால் வரைவு கமிட்டியில் சாந்தி பூஷன் இடம் பெற்றுள்ளார். இந்த நிலையில் அலாகாபாத்தில் பல கோடி மதிப்புள்ள இடத்தை குறைந்த விலைக்கு பத்திரம் முடித்திருப்பதாக அவர் மீது குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதை கிரண்பேடி அடியோடு மறுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. கமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்து வெளியேற்றுவதற்காகவே இந்த புகார் கூறப்பட்டுள்ளது. எந்த விலை கொடுத்தாவது ஊழலை ஒழிக்க சாந்தி பூஷன் பாடுபடுவார் என்றும் கிரண் பேடி தெரிவித்துள்ளார். ஊழலை ஒழிக்க கமிட்டியில் நான் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. நான் ஏற்கனவே ஊழலை ஒழிக்க பாடுபாட்டு வருகிறேன். என்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரை ஊழலை எதிர்த்து போரிடுவேன் என்றும் கிரண்பேடி மேலும் கூறினார். பிரபல சமூக சேவகர் ஹஸரேவுக்கு கிரேண் பேடி நெருங்கிய உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: