முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ப.சிதம்பரத்துடன் கவர்னர் இக்பால் சிங் சந்திப்பு

புதன்கிழமை, 27 ஏப்ரல் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஏப்.28 - பிரச்சினைக்கு ஆளாகியிருக்கும் புதுவை லெப்டினெட் கவர்னர் இக்பால் சிங் நேற்று புதுடெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்து பேசினார். அப்போது தம் மீது கூறப்படும் புகார் சம்பந்தமாக விளக்கம் அளித்ததாக தெரிகிறது.

புதுவை லெப்டினெட் கவர்னராக இருப்பவர் இக்பால் சிங். இவர், கறுப்புப்பண முதலை ஹசன் அலிக்கு பாஸ்போர்ட் கிடைக்க உதவி செய்தகாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக இக்பால் சிங்கிடம் அமுலாக்க பிரிவினர் இரண்டு நாட்கள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். ஏற்கனவே இவரிடம் அமுலாக்க பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். ஹசன் அலி பாஸ்போர்ட் வாங்க உதவி செய்த குற்றச்சாட்டையொட்டி இக்பால் சிங் பதவியில் இருந்து ராஜினாமா செய்யலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்தநிலையில்தான் மத்திய உள்துறை அமைச்சர் பி.சிதம்பரத்தை இக்பால் சிங் நேற்று சந்தித்து பேசினார். அப்போது தம் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மை அல்ல என்று விளக்கியதாக தெரிகிறது. 

ப.சிதம்பரத்தை சந்திப்பதற்கு முன்பு இக்பால் சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் ஹசல் அலிக்கு பாஸ்போர்ட் வாங்க உதவி செய்த விவகாரம் கடந்த 1997-ம் ஆண்டு நடந்தது. அது குறித்துதான் அமுலாக்க பிரிவினர் இரண்டு நாட்கள் என்னிடம் விசாரணை நடத்தினர் என்றார். 

கவர்னர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, இந்த மாதிரியான கேள்விகளுக்கு நான் பதில் அளிக்க மாட்டேன் என்று இக்பால் சிங் கூறிவிட்டார். ஹசன் அலிக்கும் எனக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை. அதுவும் பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் அமலெந்து பாண்டே கேட்டுக்கொண்டதால்தான் ஹசன் அலி பாஸ்போர்ட் வாங்க உதவி செய்ததாகவும் இக்பால் சிங் பேட்டியின்போது மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago