இஸ்லாமாபாத், ஏப். 24 - நீதிமன்ற காவலில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரபை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பஞ்சாப் மாகாண அரசிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்று வந்தால்தான் அவர்களை அனுமதிப்போம் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆட்சியில் இருந்த போது முஷாரப் 60 நீதிபதிகளை பதவி நீக்கம் செய்யவும், காவலில் வைக்கவும் உத்தரவிட்டார். இது தொடர்பான வழக்கில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மே மாதம் 4 ம் தேதி வரை முஷாரப்பை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முஷாரப்பின் பண்ணை வீட்டையே துணை சிறைச்சாலையாக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அவசர நிலையை அமல்படுத்தியதன் மூலம் அவர் மீது தேசதுரோக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் அமர்வு நீதிபதி குழு விசாரித்தது. அப்போது முஷாரப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முஷாரப்பை சந்திக்க சிறை அதிகாரிகள் அனுமதி தரவில்லை. முஷாரப்பை சந்திக்க அனுமதி மறுத்தால் எப்படி இந்த வழக்கை எங்களால் நடத்த முடியும் என்று முஷாரப்பின் வக்கீல் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் அவர் மீண்டும் நீதிமன்றத்தை அணுகவுள்ளோம் என்றும் கூறினார்.
- பழனி ஆண்டவர் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.
- கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி சந்திர பிரபையில் பவனி.
- திருவிடைமருதூர் சுவாமி தம்மைத்தானே அர்ச்சித்தல். சகோபரவெள்ளி விருசப சேவை.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமி நந்திசுவர வாகனத்தில் பவனி.
- திருப்பரங்குன்றம் ஆண்டவர் சின்ன வைர ரதம்.
- திருச்சேறை சாரநாதர் வெள்ளி கருட வாகனம்.