வங்கதேச அதிபராக அப்துல் ஹமீது ஏகமனதாக தேர்வு

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

 

டாக்கா, ஏப். 24 - வங்கதேச அதிபராக அந்நாட்டின் முன்னாள் மக்களவை தலைவர் அப்துல் ஹமீது போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 

வங்கதேச அதிபராக இருந்து ஜில்லூர் ரஹ்மான் சிறுநீரக கோளாறு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் கடந்த மாதம் சேர்க்கப்பட்டார். அப்போது அப்துல் ஹமீது தற்காலிக அதிபராக பதவியேற்றார். இந்நிலையில் ஜில்லூர் ரஹ்மான் கடந்த மார்ச் 20 ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அடுத்த மூன்று மாதங்களுக்குள் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் ஆளும் கட்சி ஈடுபட்டது. இதில் நாட்டின் மூத்த அரசியல்வாதியும், தற்காலிக அதிபருமான அப்துல் ஹமீதை தேர்ந்தெடுக்க ஆளும் கட்சி சார்பில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து அப்துல் ஹமீது வங்கதேசத்தின் 20 வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்: