கோலி பாக்டீரியாவில் இருந்து டீசல் - இங்கிலாந்தின் லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு

சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

கோலி பாக்டீரியாவில் இருந்து டீசல் - இங்கிலாந்தின் லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு
லண்டன்: ஏப், - 28 - மரபணு மாற்றியமைக்கப்பட்ட ்- கோலி பாக்டீரியத்திலிருந்து டீசல் தயாரிக்க முடியும் என்று இங்கிலாந்தின் எக்ஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கின்றனர். பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால் கவலையில் இருக்கும் உலக நாடுகளுக்கு இது நிச்சயமாக சந்தோஷமான செய்தியாகத் தான் இருக்கும். ஆனால், தற்போதைக்கு மிகக் குறைந்த அளவிலேயே இது தயாரிக்க முடிவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ் கோலி பாக்டீரியா மூலம் செயற்கை டீசலை உருவாக்க முடியும் என கண்டறிந்துள்ளோம். விரைவில் அதன் உற்பத்தி அளவை கூட்டுவோம் என்கிறார் ஜான் லவ் என்ற இங்கிலாந்து ஆய்வாளர். ் கோலினா என்ன? ் கோலி என்பது வழக்கமாக மனிதர்கள் உள்ளிட்ட வெப்ப ரத்தம் கொண்ட விலங்குகளின் பிட்டம் பகுதியில் காணப்படும் பாக்டீரியம். இந்த பாக்டீரியத்தின் பல ரகங்கள், இந்த விலங்குகளுக்கு நன்மை செய்வதாக இருந்தாலும், சில குறிப்பிட்ட ரக ் கோலி பாக்டீரியங்கள் பெரும் நோயை உருவாக்கக் கூடியவை. நல்லதும் செய்யும் ் கோலி... இப்படியான ் கோலி பாக்டீரியங்களில் ஒரு குறிப்பிட்ட ரக ் கோலி பாக்டீரியாவை பயன்படுத்தி செயற்கை டீசலை உருவாக்க முடியும் என்று எக்ஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர் மரபணுவை மாற்றி... இந்த குறிப்பிட்ட ் கோலி பாக்டீரியமானது, இயற்கையில் சர்க்கரைச் சத்தை சாப்பிட்டு அதை கொழுப்பாக மாற்றும் திறன் கொண்டது. இந்த பாக்டீரியாவானது சர்க்கரைச் சத்தை சாப்பிட்டு அதை செயற்கையான டீசலாக மாற்றும் வகையில் இதன் மரபணுவில் சில மாற்றங்களைச் செய்த எக்ஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், அதில் தாங்கள் வெற்றி பெற்றிருப்பதாக இப்போது அறிவித்திருக்கின்றனர். ஒரிஜினல் டீசல் மாதிரி தான்... இந்த பாக்டீரியம் உருவாக்கும் செயற்கை டீசல், எல்லா வகையிலும் இயற்கை டீசலைப் போலவே இருப்பதால், இதை தற்போது புழக்கத்தில் இருக்கும் டீசல் வாகனங்கள் அனைத்திலும் பயன்படுத்த முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள். சிக்கல் இருக்கு... இதில் ஒரு முக்கிய சிக்கல் இருப்பதையும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.அதாவது இந்த பாக்டீரியங்கள் தயாரிக்கும் டீசலின் அளவு மிக மிகக் குறைவாக இருக்கிறது. ஏறக்குறைய நூறு லிட்டர் பாக்டீரியாக்கள் சேர்ந்து ஒரு தேக்கரண்டி அளவுக்குத் தான் செயற்கை டீசல் தயாரிக்க முடிகிறது என்கின்றனர். வேஸ்ட் ஆகிட கூடாது... இந்த பாக்டீரியாக்களின் உற்பத்தி திறனை மேம்படுத்தாவிட்டால் தற்போதைய இந்த கண்டு பிடிப்பு பொதுமக்களுக்கு பயன்படாதாம்! அடுத்த இலக்கு... தங்களின் அடுத்த இலக்கு இந்த பாக்டீரியங்களின் செயற்கை டீசல் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதே .அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த சவாலை தங்களால் தீர்க்க முடியும் என்கின்றனர்!.

இதை ஷேர் செய்திடுங்கள்: