முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளியுறவுத்துறை அமைச்சர் பெய்ஜிங் பயணம் குறித்து மத்தியஅரசு மறுஆய்வு

சனிக்கிழமை, 4 மே 2013      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,மே.- 5 - சீன ஆக்கிரமிப்பு விஷயத்தில் இந்தியாவின் பிடி இறுகத்தொடங்கியுள்ளது. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் வெளியுறவுத்துறை அமைச்சரின் பெய்ஜிங் பயணம் குறித்து மறுஆய்வு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவிற்கு சொந்தமான லடாக் பகுதியில் சுமார் 200 சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி அன்று சீன ராணுவம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இதிலிருந்து வெளியேற இந்தியா எவ்வளவோ எடுத்துக்கூறியும் சீனா மறுத்து வருகிறது. இருநாடுகளிடையே நடந்த 3 கொடியர்மவு கூட்டங்களிலும் சீனா ராணுவ அதிகாரிகளின் பிடிவாதத்தால் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியவில்லை. இந்தநிலையில் சீனாவின் ஆக்கிரமிப்பு பிரச்சினையில் இந்தியாவின் பிடி இறுகத்தொடங்கியுள்ளது. ஆக்கிரமிப்பு பிரச்சினக்கு தீர்வுகாணுவதில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் பெய்ஜிங் பயணம் குறித்து மறுஆய்வு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் ஆக்கிரமிப்பு பகுதிகளில் சீன படைகளின் நடவடிக்கைகள் குறைந்திருப்பதாகவும் அங்கு அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் காலி செய்யப்படலாம் என்றும் டெல்லியில் இருந்து புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல்கள் வந்துள்ளன. மேலும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பெய்ஜிங் பயணம் குறித்து கடந்த வியாழக்கிழமை வரை சீனா எதுவும் கூறாமல் இருந்தது. இந்தநிலையில் சல்மான் குர்ஷித் வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் பெய்ஜிங் வருகிறார் என்று சீனா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது ஒரு முன்னேற்றமான நிலை என்பதோடு சீனாவின் நிலையில் தளர்வு ஏற்பட்டு இருப்பதை காட்டுவதாக கூறப்படுகிறது. ஆனால் ஈரான் சென்றுள்ள சல்மான் குர்ஷித் கடந்த வெள்ளிக்கிழமை கூறுகையில் லடாக் பிரச்சினைக்கு தீர்வுகாண நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை திருப்திகரமாக இல்லை. அதனால் இந்தியா சரியான நடவடிக்கை எடுக்க வேண்டியிநிலை உருவாகி உள்ளது என்றார். பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பிரச்சினைக்கு தீர்வுகாணப்படலாம் என்று சல்மான் நம்பிக்கையும் தெரிவித்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்