கொல்கத்தா நைட் ரைடர்ஸ் புனே வாரியர்சை வென்றது

வெள்ளிக்கிழமை, 10 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

புனே, மே. 11 - ஐ.பி.எல். - 6 போட்டியில் புனேயில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்க த்தா நைட் ரைடர்ஸ் அணி 46 ரன் வித்தி யாசத்தில் புனே வாரியர்ஸ் அணியை வென்றது. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி தரப்பில், கேப்டன் காம்பீர் அபாரமாக பேட்டிங் செய்து அரை சத ம் அடித்து அணிக்கு முன்னிலை பெற் றுத் தந்தார். அவருக்குப் பக்கபலமாக, டஸ்சட்டே, எம்.கே.திவாரி , ஆர்.பாட்டியா, மார்கன் மற்றும் பிஸ்லா ஆகி யோர் ஆடினர். 

பின்பு பெளலிங்கின் போது, வேகப் பந்து வீச்சாளர் பாலாஜி சிறப்பாக பந்து வீசி 3 முக்கிய விக்கெட்டைக் கைப்பற் றினார். அவருக்கு ஆதரவாக, அப்துல் லா, காலிஸ், நரீன் மற்றும் ஆர். பாட்டியா ஆகியோர் பந்து வீசினர். 

ஐ.பி.எல். போட்டியின் 56- வது லீக் ஆட்டம் புனேயில் உள்ள சுப்ரட்டா ராய் சகாரா அரங்கத்தில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. இதில் கொல்கத்தா மற்றும் புனே அணிகள் மோதின. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய கொல்கத்தா அணி நிர்ணயிக்க ப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 152 ரன்னை எடுத்தது. 

கொல்கத்தா அணி தரப்பில், கேப்டன் காம்பீர் 44 பந்தில் 50 ரன்னை எடுத்தார். இதில் 6 பவுண்டரி அடக்கம். தவிர, டென்டஸ்சட்டே 31 ரன்னையும், மார்க ன் மற்றும் எம்.கே.திவாரி தலா 15 ரன் னையும், ஆர். பாட்டியா 13 ரன்னையு ம், பிஸ்லா 12 ரன்னையும் எடுத்தனர். 

புனே அணி சார்பில், புவனேஷ்வர் குமார் 25 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, மார்ஷ் 2 விக்கெட்டும், ரசூல் 1 விக்கெட்டும் எடுத்தனர். 

புனே அணி 153 ரன்னை எடுத்தால் வெ ற்றி பெறலாம் என்ற இலக்கை கொ ல்கத்தா அணி வைத்தது. ஆனால் அடு த்து களம் இறங்கிய அந்த அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 106 ரன்னில் ஆட்டம் இழந்தது. 

இதனால் இந்த லீக் ஆட்டத்தில் கொல் கத்தா அணி 46 ரன் வித்தியாசத்தில் புனே வாரியர்ஸ் அணியை தோற்கடித் தது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளி கிடைத்தது. 

புனே அணி தரப்பில் ஆல்ரவுண்டர் மே த்யூஸ் அதிகபட்சமாக, 28 பந்தில் 40 ரன் எடுத்தார். இதில் 4 சிக்சர் அடக்கம். உத்தப்பா 35 பந்தில் 31 ரன் எடுத்தார். தவிர, பிர்லா 7 ரன் எடுத்தார். 

கொல்கத்தா அணி சார்பில், பாலாஜி 19 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட்எடுத் தார். தவிர, அப்துல்லா,காலிஸ்  மற்று ம் நரீன் தலா 2 விக்கெட்டும், ஆர். பா  ட்டியா 1 விக்கெட்டும் எடுத்தனர். இந் தப் போட்டியின் ஆட்டநாயகனாக காம்பீர் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: