முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீரடி சாய்பாபா கோவிலில் ரூ.1009 கோடி உண்டியல் வசூல்

திங்கட்கிழமை, 13 மே 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

சீரடி, மே.14 - மராட்டிய மாநிலம் சீரடியில் உள்ள சாய்பாபா கோவிலில்  கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1009 கோடி உண்டியல் வசூல் ஆகியுள்ளது. கடவுளின் மறு அவதாரமாகத்தோன்றி சீரடியில் தங்கி இருந்து மக்களின்  துயர் துடைத்த சாய்பாபாவின் அருளைப் பெற மக்கள் சீரடி நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர். 

பக்தர்கள் வருகை அதிகரித்ததால் சீரடி சாய்பாபா கோவிலில் உண்டியல் வசூலும் அதிகரித்துள்ளது. 2009-2010-ம் ஆண்டில் உண்டியல் வசூல் ரூ. 196 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இது ரூ. 298 கோடியாக அதிகரித்தது. 

கடந்த 4 ஆண்டுகளில் சீரடி சாய்பாபா கோவிலில் வருமானம் ரூ.1009 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த பணத்தில் 53 சதவீதத்தை மக்கள் நலப்பணிக்கு பயன்படுத்தி இருப்பதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன. மராட்டியத்தில் சீரடி சாய்பாபா கோவிலுக்கு அடுத்தபடியாக 

மும்பை சித்தி விநாயகர் கோவில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்