முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐபிஎல் சூதாட்டம்: திருப்பூரில் கைதானவர்களிடம் விசாரணை

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013      தமிழகம்
Image Unavailable

 

கோவை, மே.20 - ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் திருப்பூரில் கைதானவர்களிடம் கோவையில் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதில் முக்கிய பிரமுகர்கள் சிக்கினார்கள். ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கிரிக்கெட் சூதாட்டமும், வீரர்கள் கைது நடவடிக்கைகளும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத்சவான், அஜித் சண்டிலா உள்பட 16 வீரர்கள் சிக்கினர். அதே நேரத்தில் சென்னையில் இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட தரகர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பை முடிக்கி விட்டுள்ளனர். இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சென்னையில் கைதான தரகர் கொடுத்த தகவலின் பேரில் கோவை ஆர்.எஸ்.புரம் பொன்னையராஜபுரத்தை சேர்ந்த லட்சுமணன் (54) கைது செய்யப்பட்டார். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட விரும்புவதாக அவரிடம் போலீசார் நைசாக செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அதை நம்பிய லட்சுமணன் சம்மதம் தெரிவித்தார். இதை தொடர்ந்து அதிரடியாக லட்சுமணன் வீட்டுக்கு போலீசார் புகுந்து அவரை கைது செய்தனர். அப்போது லட்சுமணனின் லேப்டாப்பில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், மும்பை இந்தியன் அணியும் மோதிய ஆட்டம் ஓடிக்கொண்டிருந்தது. லட்சுமணனிடம் இருந்த லேப்டாப் ரூ.5 லட்சத்து 5ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரை ரகசிய இடத்தில் அழைத்து சென்று விசாரித்ததில். கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த பாலசுப்பிரமணியம்(51), உக்கடம் கரும்புக்கடையை சேர்ந்த அக்பர்(51) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்த ரூ.40 ஆயிரம், லேப்டாப், 7 செல்போன்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சூதாட்ட விவகாரத்தில் லட்சுமணன் தான் முக்கிய நபராக செயல்பட்டுள்ளார். அவருக்கு சென்னை, டெல்லி, மும்பை உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள சூதாட்ட தரகர்களிடம் தொடர்பு உள்ளது. அவருக்கு அடுத்த இடத்தில் பாலசுப்பிரமணியம், அக்பர் ஆகியோர் செயல்பட்டுள்ளனர்.  

சூதாட்டம் மூலம் கோவையில் வசூலான பணத்தை லட்சுமணன் நெட்பேங்கிங் வழியாக சென்னை, டெல்லி, மும்பையில் உள்ள தரகர்களுக்கு அனுப்பியுள்ளார். கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் பலரது எண்கள் உள்ளன. அவர்கள் அனைவருமே சூதாட்டத்தில் ஈடுபட்டதும். அதில் பெரும்பாலானவர்கள் தொழில் அதிபர்கள், கிளப்புகளுக்கு செல்பவர்கள் தான் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொழில் அதிபர்களை பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கோவையில் கைதான இவர்களின் கீழ் இன்னும் ஏராளமான கீழ் மட்ட தரகர்களும் இருந்துள்ளனர். லட்சுமணன் கைதானதை தொடர்ந்து அனைவரும் தமது செல்போன்களை சுட்ச்ஆப் செய்து விட்டு தலைமறைவாகிவிட்டனர். அவர்களை தனிப்படை போலீசார் வலை விரித்து தேடி வருகிறார்கள். 

தலைமறைவாக இருப்பவர்கள் குறித்தும் சூதாட்ட பணத்தை வெளிமாநில தரகர்களுக்கு அனுப்பியது எப்படி என்பது குறித்தும் கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக திருப்பூரை சேர்ந்த 2 தரகர்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். அவர்களை போலீசார் கோவைக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். சில பனியன் அதிபர்களும் இந்த கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டுவந்தது தெரியவந்துள்ளது. தற்போது கைதானவர்களின் பெயர் விபரங்களை போலீசார் வெளியிடவில்லை. அவர்களுக்கு பின்னால் உள்ளவர்கள் தலைமறைவாகிவிடக்கூடும் என்பதால் கைதானவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவையில் கைதான லட்சுமணன் 2000ம் ஆண்டு முதலே கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இப்போது நடந்துள்ள சூதாட்டம் ரூ.10ஆயிரம் முதல் ரூ.1லட்சும் வரை நடந்துள்ளது. ரூ.10 ஆயிரம் கட்டுபவர்கள் பெட்டிங்கில் வெற்றி பெற்றால் ரூ.20 ஆயிரமும் ரூ.1லட்சம் கட்டுபவர்களுக்கு ரூ.2லட்சமும் என எவ்வளவு பணம் கட்டப்படுகிறதோ அவர்களுக்கு அப்படியே இரட்டிப்பு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்று புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சூதாட்ட சம்பவம் கோவை, திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago