முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யாசின் மாலிக் கைது எதிரொலி ஸ்ரீநகரில் பலத்த பாதுகாப்பு

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர், ஏப். - 30 - ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் முகமத் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளதையொட்டி பதட்டம் ஏற்பட்டிருப்பதால் ஸ்ரீநகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஸ்ரீநகரில் கடந்த புதன்கிழமை அன்று ஒரு இளைஞரை பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீநகரில் தர்ணா போராட்டம் நடத்த மாலிக் முயன்றார். இதனால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதியை போலீசார், மாலிக்கை கைது செய்தனர். இதனையொட்டி ஸ்ரீநகரில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. எந்தவித அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருக்க ஸ்ரீநகரில் உள்ள லால் செளக் மற்றும் மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் போலீசாருக்கு உதவியாக பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். மைசூமா, லால் செளக் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளிகள் நேற்று மூடப்பட்டிருந்தன. ஸ்ரீநகரில் பல இடங்களில் போலீசார் மீது கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றன. இதனால் சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. மைசூமா பகுதியில்தான் பதட்டம் அதிகமாக இருக்கிறது. அதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony