முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பான் மன்னருடன் மன்மோகன் சந்திப்பு

புதன்கிழமை, 29 மே 2013      இந்தியா
Image Unavailable

 

டோக்கியோ,மே.30 - ஜப்பான் நாட்டு மன்னரை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நேற்று டோக்கியோவில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இந்தியா-ஜப்பான் இடையே உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விரிவாக விவாதித்தனர். 

ஜப்பானில் 3 நாள் பயணத்தை மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் அந்த நாட்டு பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் ஆகியோர்களை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவின் வளர்ச்சிக்கு ஜப்பான் அளித்து வரும் உதவிகளுக்கு நன்றியை தெரிவித்தார். மேலும் ஆசிய கண்ட வளர்ச்சிக்கு ஜப்பான் ஒரு உதாரணமாக திகழ்கிறது என்று பாராட்டினார். இந்தியாவில் அணுசக்தி உற்பத்திக்கு ஜப்பான் உதவியையும் மன்மோகன் சிங் கூறினார். மேலும் நேற்று ஜப்பான் நாட்டு மன்னர் அஹிகிடோவையும் சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகளுக்கிடயை உறவு மற்றும் இருநாடுகளுக்கும் நன்மை தரும் விஷயங்கள் குறித்தும் இருவரும் விவாதித்தனர். இந்த சந்திப்பின்போது மன்னர் அஹிகிடோவுடன் இளவரசியும் இருந்தார். பிரதமருடன் அவரது துணைவியார் குருஷரன்  கவுரும் உடன் இருந்தார். டோக்கியோவில் உள்ள அரண்மனையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபியை நேற்று மன்மோகன் சிங் சந்தித்து பேசுவதற்கு முன்னர் அஹிகிடோவை அவர் மன்மோகன் சிங் சந்தித்து பேசினார். ஜப்பானுடன் இந்தியா எப்போதுமே நெருங்கிய உறவு வைத்து வருகிறது. அணுசக்தி துறையில் ஜப்பான் முன்னேறி உள்ளது. அந்த நாட்டின் தொழில்நுட்பத்தை பகிர்ந்துகொள்ளவும் இந்தியாவில் ஜப்பான் நிதியுதவியுடன் அணுசக்தி நிலையங்கள் அமைக்கவும் உடன்பாடு ஏற்படலாம் என்று தெரிகிறது. ஆசிய கண்டத்தில் இந்தியாவும் ஜப்பானும் நெருங்கிய நட்பு நாடுகளாக திகழ்கின்றன. மேலும் ஆசிய கண்டத்தில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நிலவ இந்த நட்பு பெரிதும் உதவியாக இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்