பணவீக்க உயர்வால் வங்கி வட்டி விகிதம் உயருகிறது

திங்கட்கிழமை, 2 மே 2011      இந்தியா
Inflation-rate

 

மும்பை,மே.3 - பண வீக்கம் அதிகரித்திருப்பதால் வங்கிகளின் வட்டி விகிதத்தை உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. 2010 - 11 ம் ஆண்டு பணவீக்கம் 9 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனவே வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்து ரிசர்வ் வங்கி ஆய்வு ஒன்றை நடத்தியது. கடந்த மார்ச் மாதம் வங்கி வட்டி 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டது. இனி உயர்த்தப்பட்டால் கடந்த 13 மாதங்களில் 9 வது முறையாக வட்டி விகிதம் உயரும். ரிசர்வ் வங்கி மேலும் 0.25 சதவீத வட்டியை உயர்த்த வாய்ப்புள்ளது என்று ஸ்டாண்டர்டு வங்கியின் மண்டல அதிகாரி ஒருவர் கூறினார். 

ஆனால் மும்பையில் உள்ள தொழில் பிரமுகர் ஒருவர் 0.5 சதவீதம் வட்டி உயரலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார். வட்டி விகிதம் அதிகரித்தால் கடன் வாங்கியவர்கள் சுமை அதிகமாகும். அவர்கள் வங்கிக்கு கூடுதலாக பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்: