முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் அவுட்

புதன்கிழமை, 12 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.13 - பா.ஜ.க. கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறுகிறது. பிகார் முதல்வர் நிதிஷ்குமார் 15-ம் தேதி கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பாட்னாவில் இருக்க வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளார். அன்றைய தினம் கூட்டணி முறிவு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய ஜனதா தளம் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்று வருகிறது. பிகாரில் முதல்வர்நிதிஷ்குமார் தலைமையிலான மந்திரிசபையில் பா.ஜ.க, அங்கம் வகிக்கிறது. ஆரம்ப முதலே குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நிதிஸ்குமார் எதிர்த்து வருகிறார். பிரதம வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டால் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறும் என்று ஏற்கனவேதெரிவித்திருந்தார்நிதிஷ். இந்த நிலையில் தேர்தல் குழு தலைவராக நரேந்திரமோடியை பனாஜி கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். இது நிதிஷ்குமாருக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே. அத்வானி மிரட்டல் விட்டும் பலனில்லை. தேர்தலில் நரேந்திரமோடியை முன்னிலைப்படுத்துவது உறுதியாகிவிட்டது. இதனால் ஐக்கிய ஜனதாதளம் பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகுகிறது. இது குறித்து நிதிஷ்குமார் மூத்த மந்திரிகள், கட்சி தலைவர் சரத்யாதவ் , மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு கோவாவில் பா.ஜ.க எடுத்த முடிவிற்கு பின் நாங்களும் கூட்டணி குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

15-ம் தேதி பாட்னாவில் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ,க்கள்அனைவரும் பாட்னாவில் இருக்க வேண்டும் என்று நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். எனவே அன்றைய தினம் கூட்டணி முறிவு அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. 

முதலில் மந்திரிசபையிலிருந்து பா.ஜ.க. மந்திரிகள் வெளியேற்றப்படுவார்கள். அதன்பிறகு கூட்டணி முறிவு அறிவிக்கப்படும். தற்போது பிகாரில் ஐக்கிகய ஜனதா தளம் கட்சியில் 118 எம்.எல்.ஏ,க்கள் உள்ளனர். தனி மெஜாரிடிக்கு  122 பேர் தேவை. தற்போது 3 சுயேட்சை எம்.எல்.ஏ,க்கள் நிதிஷை ஆதரிக்க முன்வந்துள்ளனர். எனவே பா.ஜ.க. கூட்டணியிலிருந்து நிதிஷ் விலகுவது உறுதியாகிவிட்டது. 

கூட்டணி முறிவிற்கு பின் ஐக்கிய ஜனதா தளம் புதிய கூட்டணி அமைக்கவுள்ளது. ஒடிசா முதல்வர் நவின் பட்நாயக் பா.ஜ.க. மீது தற்போது அதிருப்தியில் உள்ளார். இதேபோல் மேற்கு வங்க முதல்வர் மம்தாவும் தனியாக உள்ளார். இவர்களுடன் சேர்ந்து புதிய கூட்டணி அமைக்கவும் பின்னர் பல கட்சியினரை சேர்த்து  கூட்டணியை பலப்படுத்தி பாராளுமன்ற தேர்தலை சந்திக்க ஐக்கிய ஜனதா தளம் முடிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago