செகந்தராபாத் விபத்து: சாவு எண்ணிக்கை அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

ஹைதராபாத், ஜூலை.10 - செகந்தராபாத்தில் ராஷ்டிரபதி ரோட்டில் உள்ள சிட்டி லைட் ஹோட்டல் கட்டிடம் இடிந்து விழுந்த இடத்திலிருந்து மேலும் 2  சடலங்கள் மீட்கப்பட்டன. ஒருவர் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். இதையடுத்து இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. ஹோட்டல் இடிந்து விழுந்தபோது அங்கு 20 முதல் 25 பேர் இருந்தனர் என்று கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். இடிபாடுகளுக்கிடையே சிக்கிய இருவரது சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் ஒருவரது சடலமும் மீட்கப்பட்டது என்று ஹைதராபாத் மாநகராட்சி ஆணையர் கிருஷ்ண பாபு கூறினார்.  இடிபாடுகளுக்குள் சிக்கிய மேலும் சிலரை மீட்கும் பணி  நடைபெற்று வருகிறது. இதில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய துயர் துடைப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும்போது, அவர்களுக்கு எந்தவித ஆபத்தும்நேராமல் அவர்களை மீட்க நிபுணர்கள் மிகத் தீவிரமாக அதே நேரத்தில் கவனமாக ஈடுபட்டு வருகின்றனர் என்று ஹைதராபாத் மாநகராட்சி ஆணையர் கிருஷ்ண பாபு கூறினார். இந்த கட்டடிடத்திலிருந்து 23 பேரை மீட்டதாக  அதிகாரிகள் தெரிவித்தனர். பலத்த காயமடைந்தவர்கள் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து 5 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். காயமடைந்கவர்களில் சிலரது, நிலைமை கவலைக்கிடமா உள்ளது என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: