சிறுமியின் சடலத்தை தெரு நாய்கள் கடித்துத் குதறிய அவலம்

புதன்கிழமை, 10 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, ஜூலை.11 - கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட 4 வயது சிறுமியின் சடலத்தை தெரு நாய்கள் கடித்துத் குதறிய சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் கோமதிநகர் என்ற இடத்தில் நடந்துள்ளது. இந்த சிறுமியை எவனோ ஒரு கயவன் கடத்திச் சென்று கற்பழித்து, அதன் பிறகு கொலை செய்து தெருவில் வீசியுள்ளான். இதையடுத்து அந்த சிறுமியின் சடலத்தை தெரு நாய்கள் கடித்து குதறியுள்ளன. 

இப்படி கோரமான நிலையில் தெரு நாய்கள் கடித்துக் குதறும் அளவுக்கு அந்த பூந்தளிர் என்ன பாவம் செய்தாள். அவளுக்கு ஏன் இந்த கடுமை நடந்துள்ளது. இதை போலீஸார் ஏன் கண்டுகொள்ளவில்லை என்பதற்குத் தகுந்த பதிலை யாரிடம் போய்க் கேட்பது?. 

இந்த சிறுமியின் உடலில் மொத்தம் 65 காயங்கள் உள்ளன. இச்சிறுமியை மனநிலை பாதித்த ஒரு சைகோ செய்திருப்பான் என்று கருதப்படுகிறது. சாதாரணமான மனநிலை உள்ள  எவரும் இந்த சயலை செய்திருக்க முடியாது. இந்த சிறுமியை கற்பழித்த கயவன் கல் நெஞ்சம் படைத்தவனாகத்தான் இருக்க வேண்டும்.  

ஏனென்றால் சிறுமியின் உடலை கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளான். இதனால் அவளது சிறுநீரகம் கடுமையாகச் சேதமடைந்துள்ளது. மேலும் அவளது பிறப்பு உறுப்பு சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது. அவளது உடலிலிருந்து அதிக அளவு ரத்தம் வெளியேறியுள்ளது என்று ஒரு டாக்டர் கூறினார். இதிலிருந்து அந்த பூந்தளிர் கற்பழிக்கப்பட்டு அதன்பிறகு இத்தகைய செயலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளாள் என்பது பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. இதுபற்றி போலீஸ் சூப்பிரண்ட் ரவீந்தர்கவுட் கூறியதாவது:

இந்த சிறுமியின் சடலத்தை டாக்டர்கள் குழு பிரேத பரிசோதனை செய்தது. இதன்மூலம் அந்த சிறுமி கற்பழிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சிறுமி எப்போது காணாமல் போனாள் என்பது குறித்து அவளது தாயிடம் விசாரித்த பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பூந்தளிரை இப்படிக் கொடூரமாக கொலை செய்தவனைத் தேடி வருகிறோம் என்றார்.

இந்த சிறுமியின் தாய் ஒரு விதவை. இவர் வீட்டு உபயோகப்

பொருள்களை விற்று ஜீவனம் நடத்தி வருகிறார். இந்த சிறுமியின் தாய் சம்பவம் பற்றி கூறியதாவது:

என்னுடன் தூங்கிக்கொண்டிருந்த எனது மகளை யாரோ கடத்திச் சென்று கற்பழித்துக் கொன்று விட்டனர். இதுபற்றி போலீஸாரிடம் நான் கூறினேன், அவர்கள் எனது கோரிக்கையை கேட்கவே இல்லை என்றார். 

இந்த விஷயம்  வெளியே தெரிய வந்ததும் உஷாரான போலீஸார்   சிறுமியின் தாய் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்றபோது யாரோ சிறுமியைக் கடத்திச் சென்று கற்பழித்துக் கொன்று விட்டனர் என்று கூறுகிறார்கள். ஆனால் அந்த சிறுமி கற்பழிக்கப்பட்டதும், அவளது சடலத்தை தெரு நாய்கள் கடித்துக் குதறியது மட்டும் உண்மை.

இதை ஷேர் செய்திடுங்கள்: